உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



  • குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை 245


ஒன்னார்க் கேந்திய இலங்கிலை எஃகின்
மின்மயங் கருவிய கன்மிசைப் பொழிந்தென
அண்ணல் நெடுங்கோட் டிழிதரு தெண்ணீர்

55.அவிர்துகில் புரையும் அவ்வெள் ளருவித்
தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்
பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்

60.பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி
உள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளிதழ்
ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

65.உரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிளம்
எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடசம்
எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்

70.பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமலர் ஆவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குருகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி

75செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்தல்

80.தாழை தளவம் முட்டாட் டாமரை
ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/278&oldid=1579622" இலிருந்து மீள்விக்கப்பட்டது