உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

246 * மறைமலையம் – 9

சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்

85.பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்
ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை
அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்து வாரம்

90.தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி
நந்தி நறவம் நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
ஆரம் காழ்வை கடியிரும் புன்னை
நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி

95.மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய அகலறைக் குவைஇப்
புள்ளார் இயக்க விலங்குமலைச் சிலம்பின்

100.வள்ளுயிர்த் தெள்விளி இடையீடைப் பயிற்றிக்
கிள்ளை ஓப்பியும் கிளையிதழ் பறியாப்
பைவிரி அல்குற் கொய்தழை தைஇப்
பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி

105.எரியவிர் உருவின் அங்குழைச் செயலைத்
தாதுபடு தண்ணிழல் இருந்தன மாக
எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரங் கமழ மண்ணி
ஈரம் புலர விரலுளர்ப் பவிழாக்

110.காழகில் அம்புகை கொளீஇ யாழிசை
அணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/279&oldid=1579611" இலிருந்து மீள்விக்கப்பட்டது