உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

  • குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்

மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் வண்ணவண் ணத்த மலராய்பு விரைஇய

115. தண்ணறுந் தொடையல்.........

பாட்டினியல்பு

247

காணப்படுதல் இல்லையாயிற்று. வானசாத்திரம் தசபுத்திரம், பௌதிக சாத்திரம் முதலான அரும் பெருங் கலைகளும் தம்மைப் பயில்வானுக்கு அறிவு விளைப்பக் கண்டாமல்லது, அஃதவனுக்கு உரிமையன்பினை எழுப்பக் கண்டிலமன்றோ? அவ்வாறன்றி, நளன்கதை, இராமன் கதை முதலியவற்றைக் கூறுங் காப்பியங்களைக் கேட்பார்க்கும் உள்ளம் இளகிக் கரைந்து அன்பெழக் காண்டல் எஞ்ஞான்றும் உண்மை யனுபவமாய் நிகழ்வ தொன்றன்றோ? அதுவே யன்றியும், மக்கள் உயிர் உணர்வைப் பதப்படுத்தி மென்மைபெறச் செய்வதும் வன்மைபெறச் செய்வதும் ஆறுதல் பயப்பதும் தேறுதல் விளைப்பதும் ‘பாட்டு’ ஒன்றின்கண் மட்டுமே பொருந்திக் கிடக்கின்றன. கல்லினும் வல்லென்ற கடுநெஞ்சமுடை யாரும், கணவன் வருகையை எதிர்நோக்கிப் பெருங்கவலை கொண்டு நின்ற கண்ணகி நிலையும் அவள் கணவன் கொலையுண்டான் என்று கூறுதற்கும் பொறாது ஆயர் மகள் அதனைத் தெரிக்கமாட்டாமல் நின்ற நிலையும் அந்நிலை கண்டு ஐயுற்றுக் கண்ணகி படுந்துன்பமும் பகுத்துக் கூறிய சிலப்பதி காரப்பாட்டை ஒருமுறை படிப்பாராயின் அவர் தம்மை மறந்து கண்ணீர் சிந்தி ஆற்றாதழுதல் திண்ணமேயன்றோ? வீமன் கதையெடுத்துப் போர் புரியுமாற்றை வகுத்துரைக்கும் பாரதப் பகுதியைப் படிப்போர் தாமும் அவனாய்த் தம்மை மறந்து கைபிசைந் தெழுதல் மெய்ம்மையேயன்றே? தன்னாற் காதலிக்கப் பட்ட உதயகுமரன் ஒரு விஞ்சையனால் வெட்டுண்டு தன் எதிரே விழ, அதுகண்டு பெரிதும் ஆற்றளாய்ப் பொறுத்தற்கரிய துயர் எய்திய மணிமேகலையைக் கந்திற்பாவை ஆற்றுவித்த அறவுரைப் பகுதியை நோக்கு வார்க்கும் ஆறுதல் தோன்றுவது ஆற்றவும் வியப்புடைத் தன்றோ? முழுதுந் துன்பமே நுகர்ந்து இழிவெய்தினோரும் தந்தன்மை திரியப் பெறராயின், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/280&oldid=1579542" இலிருந்து மீள்விக்கப்பட்டது