உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

13

கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக்கர்களுந் தமக்குப் பாடமாய் வந்த பட்டினப்பாலைக்கும் அதனைப் போலவே ஒர் ஆராய்ச்சியுரை எழுதித்தரும்படி வேண்டி, அதனைப் பதிப்பிடுதற்காஞ் செலவின் பொருட்டுத் தாமும் ஒருங்குசேர்ந்து பொருளுதவி செய்தனர். அம் மாணாக்கர் செய்த வுதவிக்கும் யாம் பெரிதுங் கடமைப்பட்டிருக் கின்றேம்.

திரும்பவுங் கி.பி.1910 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்கும் முல்லைப்பாட்டுப் பாடமாக வந்தது. இதற்கிடையில் முதற் பதிப்பிட்ட எமது முல்லைப் பாட்டாராய்ச்சியுரைப் புத்தகங்கள் எல்லாஞ் செலவழிந்து போனமையின், அவ்வாண்டின் மாணாக்கர் களுஞ் செய்த வேண்டு கோட் கிணங்கி அவர் தாமும் ஒருங்குசேர்ந்து முன்னர்த் தந்த பொருள்கொண்டு அஃதிரண்டாம் முறையும் பதிப்பிடப்பட்டது. இரண்டாம் பதிப்புப் புத்தகங்களுஞ் செலவாய் விட்ட மையால், இப்போதிதனை மீண்டும் பதிக்கலாயினேம். இப்பதிப்பின்கட் பல திருத்தங்களும் பல மாறுதல்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. எமதிடமுள்ள ஓர் ஏட்டுச் சுவடியையும் அச்சுப் புத்தகத்தையும்ஒப்பிட்டுப் பார்த்து முல்லைப்பாட்டுச் செய்யுளின் கண்ணுஞ் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

முல்லைப் பாட்டுப் பயில்வோர் பிறநூல் உதவி பெரிதும் வேண்டாமல் எளிதில் அதனைக் கற்றறிதற் பொருட்டு முன்னிரண்டு பதிப்புக்களிலும் இல்லாத பல விளக்க உரைக் குறிப்புகள் இப்போதிதன்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக் கின்றன. அதுவேயுமன்றி, உலக வழக்கத்திலுள்ள சொற்களைத் தவிர்த்து முல்லைப்பாட்டில் வந்த ஏனை எல்லாச் சொற்களையும் அகர வரிசைப்படுத்தி அவற்றிற்கெல்லாம் பொருள்கள் எழுதியிருக் கின்றேம். இவ் வருஞ்சொற்பொருள் வரிசையின் உதவி கொண்டு இச்செய்யுட்பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளிதேயாம். இனி, இவ்வருஞ் சொற்கட்குப்பொருள் வரையுங்கால் இம் முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண் வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை யடுத்துவந்த காலத்தும் அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/46&oldid=1578893" இலிருந்து மீள்விக்கப்பட்டது