உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் - 9

சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே ஒரு நொடிப்பொழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்ட முடியாத ருபெருவியப் புணர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்றலுடையனாவன். இஃது இவனுக்கு மிக எளிதிலே முடிவதொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடியதொன்றாயினும், அம்மனவியல்பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்ய வல்லரான நற்பெரும் புலவர் உ உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாஞ் 'சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைக்” காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலேதான் அறியப்படும். இங்ஙனம் பாட்டுவழக்கின் நுட்ப முணர்ந்து பிற மொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர்2, தாந்தே3, செகப்பிரியர்4, மிலிட்டனார், கீதே, காளிதாசர் முதலியோரும், நஞ்செந் தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடிமருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப் புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றோம்.

அடிக்குறிப்புகள்

1.

Areopagitica

2.

Homer

3.

Dante

4.

Shakespeare

5.

Milton

6.

Goethe

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/55&oldid=1578902" இலிருந்து மீள்விக்கப்பட்டது