உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

25

மெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்க நெற்றியே அம் மகிழ்ச்சிக் குறிப்புப் புலனாக முன் விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல்லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பாலதொன்றாம். உள்ளமுவக்கும் முல்லை நிலத்திற்கணவனும் மனைவியும் நேயமாய் மருவிவாழும் இயற்கை இப்பாட்டின்கண் ஓவியம் எழுதிக் காட்டினாற்போல் எவ்வளவு உண்மையாகவும் இனிதாகவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது! இப்பொருளருமையோடு செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் நீர்மடையில் தெளிநீர் மொழுமொழுவென்று ஓடுவதுபோல் ஓசையின்பம் உடையவாய் ஒழுகுதலும், ஒரு சொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூறலாகாமல் முன்னும் பின்னுமுள்ள பொருட்டொடர்புக்கு ஏற்ப இடையே முழுமுழுச் சொற்களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற் பாலனவாகும் என்பது.

ச்

இன்னும் பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவர் உலக இயற்கைப் பொருள்களை ஆங்காங்குத் திரிந்து கண்டு பெருங் களிப்பும் பெருகிய மனவெழுச்சியும் உடையராய், வருத்தமின்றி இனிதாகப் பாட்டுகள் பாடினார் என்பது அவர் தாம் விரித்துச் சொல்லும் பொருள்களுக்கு எடுத்துக் காட்டும் உவமைகளால் நன்கு புலனாம். ஓரிடத்தில் மான் கொம்பைப் பற்றிச் சொல்லவந்துழி, 'இரும்பை முறுக்கினாற் போலுங் கரிய பெரிய கொம்பு' என்னும் பொருள்பட "இரும்பு திரித்தன்னமாயிரு மருப்பு” (அகநானூறு,4) என்றும்,ஓரிடத்தில் இருவர் நேய ஒற்றுமையினைச் சொல்ல வந்தபோது 'கத்தியுறை செய்யுஞ் சிறிய தொழிலாளன் அரக்கொடு சேர்த்த கல்லைப் போலப் பிரியோம்' என்னும் பொருள்படச் ‘சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம்' (அகநானூறு,1) என்றும், ஓரிடத்திற் புறந்துருத்திய நண்டின் கண்களுக்கு வேப்பம்பூ முகையினை உவமையாக எடுத்து "வேப்புநனையன்ன நெடுங்கட்கள்வன்" (ஐங்குறுநூறு, 30) என்றும், ஓரிடத்தில் ‘வயல் நெல் புதிது ஈன்ற பசிய கதிருக்குச் செல்வர்கள் தமது குதிரையின் உச்சியில் தூக்கிக் கட்டிய தையல் மூட்டுள்ள கவரிமயிரை உவமையாக எடுத்து “முரசுடைச்செல்வர்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/58&oldid=1578905" இலிருந்து மீள்விக்கப்பட்டது