உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் – 9

சை

புரவிச்சூட்டும், மூட்டுறு கவரி தூக்கியன்ன, செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்” (அகநானூறு, 156) என்றும் ரிடத்தில் ‘மழையில்லாத வானம் பூத்தது போல இலை நெருங்கிய முசுண்டைச் செடிகள் வெள்ளிய மலர்களைப் பூக்க’ என்னும் பொருள் போதர “மழையில் வானம் மீன் அணிந்தன்ன, குழையமல் முசுண்டை வாலிய மலர்” (அகநானூறு, 264) என்றும், ஓரிடத்தில் ‘பஞ்சின் றொடர் நுனிபோலுந் தலையினையுடைய புதர்களின் மேல் ஏறிப்படரும் இண்டைக் கொடிகளின் நீரில் நனைந்த தளிர்கள் நெய்யில் தோய்த்தனபோல விளங்கி இரண்டாக இருளைக் கூறுபடுத்தினாற்போல் ஒவ்வொரு தளிரும் இரண்டு கூறுபட்டனவாய்க் கரியநிறத்துடன் அசைய என்னும் பொருள்படத் ‘துய்த்தலைப்பூவின் புதலிவர் ஈங்கை, நெய்தோய்த்தன்ன நீர்நனை அந்தளிர், இருவகிரி இருளின் ஈரிய துயல்வர’ (அகநானூறு, 294) என்றும், ஓரிடத்திற் ‘பச் மஞ்சளின் பசிய முதுகைப் போல் சுற்றிலும் பொருத்துடம்பு உடையனவாய்க் கழியிற் கிடக்கும் இறா மீன்' என்பது விளங்க "முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச், சுற்றிய பிணர சூழ்கழியிறவு (நற்றிணை,101) என்றும், ஓரிடத்தில் ‘மயிலின் அடிபோல் மூன்று பிளவாய் இருக்கும் இலைகளையுடைய பெரிய கதிருள்ள நொச்சி' என்பது தோன்ற ‘மயிலடி இலையமாக்குரல் நொச்சி’ என்றும், ஓரிடத்திற் ‘கதிர் அரிந்துவிட்டதினைப்பயிரின் தாள்போன்ற சிறிய பசுங்காலை யுடையவாய் ஓடும்நீரில் ஆரல்மீனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாரை' என்பது புலப்படத் ‘தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால, ஒழுகுநீர் ஆரல் பார்க்குங் குருகு' (குறுந்தொகை, 25) என்றும் போந்த தன்மை நவிற்சியணிச் சொற்றொடர்களானே பழைய தமிழ்ப் புலவரின் விழுமிய உலகியற் பொருள் அறிவினை இனிது அறிந்து கொள்ளலாம். இன்னும் இவைபோன்ற எடுத்துக்காட்டுகள் நூறுநூறாகப் பெருக்கலாமேனும், இங்கு அதற்கு இடம் பெறுதல் கூடாமையின் தனை இவ்வளவில் நிறுத்து

66

கின்றோம்.

இத்துணை நுட்பமான உலகியற் பொருள் அறிவு பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனைப் பழம் புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/59&oldid=1578906" இலிருந்து மீள்விக்கப்பட்டது