உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் - 9

இயற்றப்போன காலங்களிலெல்லாந் தாமே வெற்றி பெறும் பாருட்டு அதனைப் பெறுவிக்கும் உயிர்த்துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம் முன்னோரில் இறந்துபட்ட வர்களான இந்திரன் வருணன் மித்திரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடும் காலங்களிலெல்லாந் தாம் உணவாக அயின்றுவந்த பலவகையான விலங்குகளைக் கொன்று,

அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்விசெய்தும், வேள்விச் சடங்குகளைப் பலவேறு வகையவாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர்.

(இருக்கு வேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள, 33) "இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட் களஞ்சியங்களை ஒருங்கு சேர்த்துக்கொண்டு எம்முடன் வாணிகஞ் செய்யாதே!” (3)

செல்வத்தின் மிக்க தஸ்யுவை நீ தனியாகவே நின் குலிசப் படையாற் கொன்று, இந்திரனே, நீ நின் துணைவருடன் ஏகுகின்றாய்!

தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள், வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாய்த் தப்பியோடி அழிந்தனர். (4)

(51)

ஆரியரையுந் தஸ்யுக்களையும் நன்றாய் வேறுபிரித்தறிந்து கொள்க! சடங்குகள் இயற்றாத அவர்களைத் தருப்பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (8)

(53)

இரிஜிஸ்வான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த அந்நாளில், வங்கிரிதனுடைய நூறு கோட்டை களையும் நீ அழித்தனையன்றோ!

(8)

துணைவரில்லாத சுசுரவர்களுடன் போர்புரியும் பொருட்டு, அறுபதினாயிரத்துத்தொண்ணுற்றொன்பதுகாலாட்களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான இருபதின் மரையும், ஓ இந்திரனே, பரந்த புகழுடையாய், நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/63&oldid=1578910" இலிருந்து மீள்விக்கப்பட்டது