உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை எல்லாவற்றையும் மேற்கடந்த தேர் உருளைகளால் அழித்துளையன்றோ!

(103)

(9)

இந்திரனே, தஸ்யுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணையை ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பையும் மிகுதிப் படுத்துக!

(3)

(163)

தெய்வத்தை நோக்கி நினைத்த மனத்தினதாய் வலிய குதிரை வெட்டப்படுதற்கு முன்வந்து நிற்கின்றது.

அதற்கு உறவினதாக வெள்ளாடும் அதற்குமுன் ஓட்டப் பட்டு வந்திருக்கின்றது; இருடியரும் பாடகரும் அதன் பின் வருகின்றனர்.

(12)

அக்குதிரை மிகச்சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின்றது, தன் தாய் தன் தந்தையின்பால் வந்திருக்கின்றது.

நன்கு வரவேற்கப்பட்டுஇன்று அது தேவர்கள்பாற் செல்லும்; அதனைப் பலியாகக் கொடுப்பவனுக்கு அது பல நன்கொடை யினைத் தரும்'

டு

(13) என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராதல் துணியப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்தபோது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தோற்றம் உடையராய் இருந்தவர் தமக்கெல்லாந் தஸ்யுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் வழங்குவாராயினர். கிரேக்கர் மற்றை நாட்டவரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல் போல ஆரியருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தனர். தமிழர் முன்னாளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை “மிலேச்சர் ஆரியர்" என்னுந் திவாகர பிங்கலந்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும். உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட்புகுதலுந்தமிழரிற் சிலர் அவரொடு போர் புரிந்து தோல்வியடைந்தனர்; சிலர் அமைதியின் பொருட்டு மலைகளிலுங் காடுகளிலும் போய் இருந்தனர். சிலர் கடும் போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/64&oldid=1578911" இலிருந்து மீள்விக்கப்பட்டது