உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் - 9

இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமையாதனவான பல்வகை முயற்சிகளையும் முற்றுப் பெறுவித்தற் பொருட்டுச் செய்யுந் தொழில் வேறுபாடுகளும் பிறவுந் தெள்ளிதின் ஆராய்வதாம்.

இனிப் பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கை யினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஒர் ஆண்மகனையும் ஒரு பெண் மகளையும் எடுத்து வைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவை தாம் எழுதப் படுதல் இல்லை. எல்லா மக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினால் நிகழும் ஐந்திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஐந்திணையொழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாங் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்துகொள்க. இ து கடைப்பிடியாய் உணர்த்துதற்கே

தொல்காப்பியனார்,

“மக்கள் நுதலிய அகன்ஐந் திணையுஞ் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறா அர்?”10

என்று கிளந்து கூறினார்.

ஆசிரியர்

இனி,இதுபோற்பொதுவாகவன்றி, மக்களுள் ஒவ்வொருவருந் தத்தம் முயற்சிவேறுபாடுகளுக்கு ஏற்பப்பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செயலும் உடையராய் உலகநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு செயல் முதலியன எல்லாங் கிளந்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையொருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலகநடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெளியே தோன்றிக் கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன்றும் பண்பு செயல்களைக் கூறும் புறத்திணைப் பாட்டுக்களில் அவ்வப்பண்பு செயல்கட்கு உரியார் பயர் கூறல் வேண்டுவது இன்றியமையாததேயாம் என்க. இந்நெறி அறிவுறுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பி யனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/69&oldid=1578917" இலிருந்து மீள்விக்கப்பட்டது