உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை “புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கின் அளவுத லிலவே”11

என்று கூறினார்

37

இனி, அகம் புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமுங் கலந்துவரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுந் தொடர்புற்றுச்செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகிவருமாயின், அவற்றுள்ளும் ஒருவர் பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின்னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஒர் அகவொழுக்கங் குறுகி வருமாயின் அவற்றுள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப்புறவொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்ப வருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்நூறாண்டிற் பிறந்த நூல்களிலெல்லாம் இனிது காணப்படும்.

அடிக்குறிப்புகள்

1. Ruskin : Modern painters, Vol. III P. 284

2.

3

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

குறுந்தொகை 167.

“காரோாடர் உரைகாரர் - திவாகரம், மக்கட் பெயர்த் தொகுதி”

There can be little doubt that Dravidian Languages were actually floursishing in the western regions of Northen India at the period when languages of the Indo-European type were introduced by the Aryan invasions from the north west. Dravidian characteristics have been traced alike in Vedic and Classical Sanscrit. in the Prakrits or early popular dialects and in the modern vernaculars derived from them”. pp.41,42 Ch. ii, “The Cambridge History of Ancient India.” வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலில் இதற்குச் சான்றுகள் காண்க. The French Revolution

Professor William Minto

The Literature of the Georgion Era, pp. 42-43

Love

தொல்காப்பியம், பொருள், 54.

தொல்காப்பியம் பொருள், 55.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/70&oldid=1578918" இலிருந்து மீள்விக்கப்பட்டது