உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

3. முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறனும்

இனி, இங்கு ஆராய்தற்பொருட்டு எடுத்துக் கொண்ட முல்லைப்பாட்டில் “தன் மனையாளைப் பிரிந்து பகைவேந்த ரொடு போர் செய்ய போவானொரு தலைவன் தான் பிரிவதனை அவளுக்கு நயமாக உணர்த்திக் 'கார்காலத்தொடக்கத்தில் வருவேன், அதுகாறும் நீ ஆற்றியிரு' என்று சொல்லிப் பிரிய, அச் சொல்வழியே ஆற்றியிருந்தவள், அவன் சொன்ன கார்காலம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினள்; பின்னர்ப் பெருமுது பெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றாதவள் 'இங்ஙனம் ஆற்றாது வருந்துதல் கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றதலே செயற்பாலது' என்று உட்கொண்டு பொறுமையுடன் இருந்த தலைவியிடத்துச்,சென்ற தலைவன் மீண்டுவந்தமை" ஆகிய அகப்பொருள் இருப்புச் சொல்லப்பட்ட மையால், பாட்டின்கட்டலைமகன் தலைமகள் சிறப்புப்

ப்

பயர்

இன்னவென்று எடுத்துச் சொல்லப்படவில்லை. இங்ஙனத் தலைமகன் தலைமகளைப் பிரியும்போது ஆற்றுவித்துப் போதலும், போனபின் அவன் வினை முடித்து வருந்துணையும் அவள் ஆற்றியிருத்தலும் இங்குச் சொல்லப்பட்டதலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரியனவாகையால் ஆசிரியர் நப்பூதனார் அவர் பெயர் இங்கெடுத்துச் சொல்லாமை பற்றி வரக் கடவதோர் இழுக்கு ஒன்றுமில்லை யென்றுணர்க.

இனி, முல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம். 'வஞ்சி தானே முல்லையது புறனே" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார், வஞ்சி என்பது ஒர் அரசன் வேற்றோர் அரசன் நாடு கைப்பற்றுதற் பொருட்டுப் படையெடுத்துச் செல்வது. வஞ்சித்திணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/71&oldid=1578919" இலிருந்து மீள்விக்கப்பட்டது