உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் – 9

சைய

எவ்வளவுதான் சிறந்த உரை உரைப்பினும் அது செய்யுட் பொருளைக் கௌவிக் கொண்டு செல்லாமல் வேறுபடுமாயின், அது கொள்ளற் பாலதன்று என மறுக்க. செய்யுளுக்கு உரையெழுதுதல் வேண்டுமேயன்றி, உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல் மாற்றல் வேண்டு வேண்டுமென்றல் ‘முடிக்குத் தக்க தலைசெய்து கொள்வேம்' என்பார் சொற்போல் நகையாடுதற்கே ஏதுவாமென்றொழிக. அற்றன்று. செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்கு மின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையும் சிதறவைத்துப் பாடினாராகலின் அக் கருத்தறிந்து நச்சினார்க் கினியர் அங்ஙனம் பொருளுரைத்துக் கொண்டார் என்னாமோ வெனின்; அறியாது கட ாயினாய், உலகவியற்கையும் மக்களியற்கையும் அறிந்து, வரிசை வரிசையாக அரும்பொருள் விளங்கித் தோன்றப் பாடும் நல்லிசைப் புலவர் அவ்வாறு ஓரொழுங்குமின்றிப் பாடினாரென்றல் உலகில் எங்குங் காணப்பட ாமையானும், அது நல்லிசைப் புலமை ஆகாமையானும் அங்ஙனஞ் சொல்லுதல் பெரியதோர் இழுக்காய் முடியும் என்றுணர்க.

அற்றாயின், மிக்க செந்தமிழ்நூற் புலமையும் நுணுகிய அறிவுமுடைய நச்சினார்க்கினியர் அவ்வாறு இணங்காவுரை எழுதியதுதான் என்னையோவெனின்; வடமொழியில் இங்ஙனமே செய்யுட்களை அலைத்துப் பாரட்டு ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாக இணங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப் பின்னேயிருந்த நச்சினார்க்கினியர்,வடமொழியில் அவர் எழுதிய உரைகளைப் பன்முறை பார்த்து அவைபோற் றமிழிலும் உரை வகுக்கப் புகுந்து தமிழ்ச் செய்யுள் வழக்கின் வரம்பழித்து விட்டாரென்றுணர்க. வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச் சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலாவுரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும் தீபா (Thibaut) பண்டிதர் திருத்திய ஆங்கில மொழிபெயர்ப்பானும் உணர்க.

இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பொருந்து மிடங்களிலெலாம் ஏற்றுக்கோடற்பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழந்தமிழ் நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/77&oldid=1578926" இலிருந்து மீள்விக்கப்பட்டது