உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

6. பாட்டின் வரலாறு

இனித்திருமுருகாற்றுப்படைமுதலான பாட்டுக்கள் ஒன்பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்பிட்டுப் பாடவந்தமையால், இம் முல்லைப்பாட்டிற்குத் தலைவன் பெயர் எழுதப்பட வில்லையாயினும், இதற்கும் உள்ளோன் ஒரு தலைவன் உண்டென்பது துணியப்படும். ம்முல்லைப்பாட்டை

அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிதற் பொருட்டுச் சென்றபோது, அவன்றன் மனைவி கொழுநன் பிரிந்த துயரத்தை ஆற்றிக்கொண்டிருந்த அருமையும், அவன் அவ்வரசரையெல்லாம் வென்று தான் சொன்னவண்ணங் கார்காலத் துவக்கத்தில் மீண்டுவந்தமையுங்கண்டு நப்பூதனார் இதனைப் பாடினா ரென்பது புலப்படும். இவ்வாறே நெடுநல்வாடையிலும் ஆசிரியர் நக்கீரனார்,நெடுஞ்செழியன் மனைவி அவனைப் பிரிந்து வருந்திய

துன்பத்தினை விரித்துச்,

“செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்துணை யோரென முகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா

மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/79&oldid=1578928" இலிருந்து மீள்விக்கப்பட்டது