உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை”

47

என்று கூறுதெலொடு நப்பூதனார் கூறுவதையும் ஒப்பிட்டு

உணர்ந்துகொள்க.

வாடைக்காலத்தும்

ம்

வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக் காலந் தமிழ்நாட்டு வழக்காம் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலின்' வேனிற் காலத்துப் போர்மேற் சென்ற தலைவன் திரும்பி மனையாள்பால் வந்து சேர்தற்குரிய கார்காலத் துவக்கத்திலே பிரிவாற்றியிருந்த தலைவியின் முல்லை யொழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூதனார் இம் முல்லைப்பாட் டியற்றினார். திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர்மேற் செல்லத் தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்று பகுத்தறிந்து கொள்க. வேனிற் காலத்திற் பெரும்போர் துவங்கி நடைபெறுகையில் வேனில் கழிந்து கார்காலந் தோன்றியதாக

ருபடை மக்களும் அக்காலங் கழியுந் துணையும் போர் விட்டிருந்து, மறித்துங் கூதிர்காலத் தொடக்கத்திலே போர் துவங்குவராகலின், அக்காலத்திலே அரசர் தம் மனைக்கு மீண்டுவந்து தங்கிப் பின்னருங் கூதிர்காலத்திலே போரை நச்சிப்போவது வழக்கமாகும் என்க.

இனி, நெடுஞ்செழியன் தமிழில் வல்லவன், சிறந்த கொடையாளி, அஞ்சாத போராண்மை வாய்ந்தவன் என்பது புறநானூற்றில் அவன் பாடிய ‘நகுதக்கனரே” என்னுஞ் செய்யுளால் இனிது விளங்கலானும், தமிழ்ப் புலவர் பலரைச் சேர்த்துவைத்துத் தமிழை வளப்படுத்து வந்தான் என்பது மதுரைக்காஞ்சி முதலிய வற்றால் தெரிதலானும் இவனையும் இவன் கற்புடை மனைவியையுஞ் சிறப்பித்துப் புலவர் பலர் பாடினாரென்பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் சொல்லப்படாமை என்னையெனின்; அகப்பொருளொழுக்கம் பயின்று வருகின்ற இதன்கண் அவ்வாறு ஒரு தலைமகன் பெயர் சூட்டிச்சொல்லப்படமாட்டாதென்பதை முன்னரே காட்டினாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/80&oldid=1578929" இலிருந்து மீள்விக்கப்பட்டது