உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் - 9

இங்ஙனமே நெடுநல்வாடையுள்ளுந் தலைவன் பெயர் குறித்துச் சால்லப்படாமை காண்க.

இனி, இச் செய்யுள் இல்லோன் றலைவனாக வைத்துப் புனைந்து கட்டி இயற்றப்பட்டதென உரை கூறினாருமுளர். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய அரும்பெருந் தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லது புனைந்து கூறுங் கட்டுவழக்குத் தமிழில் இல்லை என்றற்கு அக்காலத்து இயற்றப்பட்ட நூல்களே சான்றாமாகலின், அவர் கூறியது பொருந்தா வுரை என்க. அற்றாயின், இறையனார் களவிய லுரையில் இல்லோன் தலைவனாக வரும் புனைந்துரை வழக்குச் சொல்லப்பட்ட தென்னையெனின்; அங்ஙனம் அருகி வருவதுஞ் செய்யுள் வழக்கேயாம் பொய்யென்று களையப்படாது என்று அறிவுறுத்தற் பொருட்டுச் சொல்லப்பட்டதேயல்லாமல் அக்காலத்து அங்ஙனம் நூல்செய்தல் உண்டென்பதூஉம் அதனாற் பெறப்பட்டதில்லையென்றொழிக.

செய்யுட் பொருள் நிகழும் இடம் 89 ஆவது அடியிற் காண்க.

இனி, பாட்டுடைத்தலைவி யிருக்கும் இடம் பல்லான் மலிந்த முல்லைநிலக் காட்டில் மிகவும் அழகியதாகக் கட்டப் பட்ட எழுநிலை மாடமாகும். பரிய மரங்கள் நெருங்கி அடர்ந்து தண்நிழல் பயப்பவுங்,காட்டுக்கோழிகள்பேட்டுடனுங் குஞ்சுடனும் முல்லைக்கொடிகள் பிணைந்து படர்ந்த பந்தரின் கீழ்ச் செல்லவும், புள்ளினங்கள் செய்யும் ஓசையன்றி வேற்றொலி விரவாது தனித்து மிக்க எழிலுடன் விளங்கும் முல்லைக்காடு காதல் இன்பம் நுகருந் தலைமக்கட்குக் கழிபெருஞ்சுவை மிகுக்குஞ் சிறப்புடைமையாற் பழைய நாளிற் பெருஞ் செல்வவளம் வாய்ந்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம்.

(24-79) அடிகாறுங் காண்க

இனி, தலைமகளைப் பிரிந்து வினைமுடிக்கப் போன தலைமகன் இருக்கும் இடம்; பகைவர் நகரத்தைச் சூழ்ந்து அரணாயிருக்கும் முல்லைக்காட்டிற் பாடிவீடாகும். முற்கால இயற்கைப்படி அரசர் தம் நகரத்திற்குக் காவலாக மதில், அகழி, பாலைவெளி முதலியவற்றை அரணாக அமைத்தலேயன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/81&oldid=1578930" இலிருந்து மீள்விக்கப்பட்டது