உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

49

அவற்றிற்கும் புறத்தே அடர்ந்த காடுகளையுங் காவலரணாக வைப்பர்.இவ்வாறு சமைக்கப்பட்டபகைவரது காட்டிற் சென்று பாட்டுடைத் தலைவன் பாசறையிலிருக்கும்

சொல்லப்படுகின்றது.

இருப்புச்

செய்யுட்பொருள் நிகழுங்காலம் (5-6) அடிகளைக் காண்க.

இனி, தலைமகள் முல்லைநிலத்து மாளிகையில் இருக்குங்காலங் கார்காலத்தில் மாலைப்பொழுதாகும். கார்காலத்து மழைபொழிந்த முல்லைக்கானம் மரஞ்செடி கொடிகளில் இலைகள் நீரைத் துளிப்பப், பறவைகள் ஆணும் பெண்ணுமாய் இன்பம் நுகர்ந்து கூடுகளில் ஒடுங்கிக் கிடப்ப வானத்திற் கரியமுகில்கள் பரவி எங்கும் மப்பும் மாசியுமாய் இருப்ப, அதனொடு மங்கல் மாலையுஞ் சேர்ந்து மழை காலத்தின் இருண்ட இயல்பை மிகுதிப் படுத்தித் தோன்றும் போது, தனியளாய் இருக்குந் தலைவிக்கு ஆற்றாமை மிகுதலுங் கணவன் கற்பித்த சொற்றவறாமல் அவள் அதனைப் பொறுத்து இருத்தலும், அங்ஙனம் இருப்போளுக்குக் கழிபேர் உவகை தோன்றத் தலைவன் மீண்டு வருதலும் போல்வன எல்லாம் இசைவாய் நடைபெறுதற்கு இக்காலம் பெரிதும் ஏற்புடைத் தாதல் காண்க.

50 ஆவது அடியைக் காண்க

இனி, தலைமகன் பாசறைவீட்டில் இருக்குங்காலம் வேனிற் காலத்து இறுதி நாளில் இடையாமம் என்க. வேனிற்காலத்துப் பகைவயிற் பிரிந்த தலைமகன் வெஞ்சுடர் வெப்பந் தீர நால்வகைப் படையும் நீரும் நிழலும் பெறும்பொருட்டுக் கான்யாறு ஓடும் (24 ஆவது அடி) காட்டில் தங்கிப் பகைவரொடு போர் இயற்றுங் காலமும் அதுவேயாம் என்க. இப்பாட்டில் அவன் பெரும் பான்மையும் போர்வினை முடித்து அவ்வேனிற்காலத்தின் கடை நாள் இரவிற் பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றை நாள் தொடங்குங் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவுகழிய வருநாள் மாலைப் பொழுதில் மீண்டுந் தன் தலைவிபாற் சென்றமையுஞ் சொல்லப்படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத நச்சினார்க்கினியர் தொல்காப்பியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/82&oldid=1578931" இலிருந்து மீள்விக்கப்பட்டது