உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

50

மறைமலையம் – 9

பொருளதிகார உரையில் தலைவன் பாசறையிருப்புக்குங் கார்காலம் உரித்தென்று உரை கூறினார்; ஆசிரியர் தொல்காப்பியனார், “கூதிர்வேனில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்”' என்பதனாற் குளிர் காலத்துப் பாசறையும் வேனிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம்படுதலானுந், தலைமகட்குக் கார்காலங் குறித்துவந்த தலைமகன் அது கண்ட வளவானே தான் எடுத்துக்கொண்ட வினை முடித்து மீளுவான் என்பது அவர்க்கும் உடம் பாடாகலானும், இச்செய்யுள் செய்கின்ற நப்பூதனார்க்கும் அதுவே கருத்தாக லானும், போர்வினைக்கு மிகவும் இடையூறு பயப்பதான கார்காலத்தில் இருபடை மக்களும் போர் விட்டிருத்தலே உலகவியற்கை யாகலானும் அவர் பாசறை யிருப்பிற்குக் கார் காலமும் உரித்தென்றது பொருந்தாதென மறுக்க. எடுத்த வினை முடியாதாயின் அதனை இடைப்பட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும்பவுங் கூதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவர் என்றறிக.

ரு

அடிக்குறிப்பு

“கூதிர் வேனில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்’

- புறத்திணையியல், 21.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/83&oldid=1578932" இலிருந்து மீள்விக்கப்பட்டது