உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

25

மறைமலையம் – 9

சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி

வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப்

படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி,

யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்

30 கவலை முற்றங் காவ னின்ற தேம்படு கவுள சிறுகண் யானை

யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத் தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்

35 கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா விளைஞர் கவளங் கைப்பக், கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ ரோடா வல்லிற் றூணி நாற்றிக்,

40 கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவில் லரண மரண மாக,

வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு,

45 குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்க நந்துதொறு மாட்ட

50 நெடுநா வெண்மணி' நிழத்திய நடுநா, எதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர் சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத் துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப் பெருமூ தாள ரேமஞ் சூழப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/85&oldid=1578934" இலிருந்து மீள்விக்கப்பட்டது