உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

85

  • மறைமலையம் – 9

பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ, ளஞ்செவி நிறைய வாலின, வென்றுபிறர்

90 வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரி, வலனேர்பு வயிரும் வளையு மார்ப்ப, வயிர

செறியிலைக் காயா வஞ்சன மலர

முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்,

95 கோடற் குவிமுகை யங்கை யவிழத், தோடார் தோன்றி குருதி பூப்பக், கான நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் றிரிமருப் பிரலையொடு மடமா னுகள்,

100 வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர்

வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.

அடிக்குறிப்புகள்

1. 'ஒண்மணி' என்பதும் பாடம்.

2.

'நிழற்றிய' எனவும் பாடம் உண்டு; ஆனால் அது பொருந்தாது; ஓசையடங்குதல் எனப் பொருள்படும். ஈண்டைக்கு 'நிழத்திய' என்பதே பொருத்தமாம். 'நிழற்றல்' ஒளிவிடுதலெனப் பொருள்படும் வேறு ஒரு சொல்லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/87&oldid=1578937" இலிருந்து மீள்விக்கப்பட்டது