உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

8. பொருட்பாகுபாடு

(1-6) கார்காலம் மாலைப்பொழுது

கார்காலம் இப்போது தான் தொடங்கியதாகலின் கரிய முகில் மிகவும் நீரைப் பொழிந்தது. 'பெரும் பெயல்' என்பது கார்காலத் தொடக்கத்திற் பெய்யும் முதற்பெயல், இதனைத் 'தலைப்பெயல்' என்றுஞ் சொல்லுவர். இங்ஙனம் முதற்பெயல் பொழிந்துவிட்ட நாளின் மாலைக்காலம் முதலிய சொல்லப்பட்டது.தலைவன் குறித்துப்போன கார்காலம் வந்தது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை நினைந்து மயங்கி ருத்தலும், அவ்வாறு இருப்போள் மயக்கந்தீர அவன் மீண்டு வருதலும் இப்பாட்டின்கட் சொல்லப்படுதலின், அவற்றிற்கு இசைந்த கார்கால மாலைப் பொழுதை முதலிற் கூறினார் என்றறிக.

(7-24) தலைமகள் தனிமையும் அவளது பிரிவாற்றாமையும்

6

வேனிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிந்த தன் காதலன் சொன்ன கார்காலம் வந்தும் அவன் வந்திலாமையின் தலைமகள் பெரிதும் ஆற்றாளாகின்றாள். அது கண்டு ஆண்டின் முதிர்ந்த பெண்டிர் அவளை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தம் ஊர்ப்பக்கத்தேயுள்ள மாயோன் கோயிலிற் போய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுந் தூவி வணங்கி நற்சொற் கேட்பநின்றார்; நிற்ப, அங்கே அருகாமையிலிருந்த மாட்டுக்கொட்டிலில் நின்ற ஒர் இடைப்பெண்,புல்மேயப்போன தாய் இன்னும் வராமையால் சுழன்று சுழன்று வருந்துகின்ற ஆன்கன்றுகளைப் பார்த்து ‘நீங்கள் வருந்தாதீர்கள், நுங்கள் தாய்மார் கோவலரால் ஓட்டப்பட்டு இப்பொழுதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/88&oldid=1578938" இலிருந்து மீள்விக்கப்பட்டது