உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

66

மறைமலையம் - 9

ந்

வந்துவிடுவர்’ என்று சொல்லிய நற்சொல்லை அம்முதுபெண்டிர் கேட்டு வந்து, அன்னாய்! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சொல்லானும், நின் காதலன் போகுந் தறுவாயில்அவன் படை மறவர் பாக்கத்திலே கேட்டுவந்த நற்சொல்லானும் நின் தலைவன் தான் எடுத்துச் சென்ற போர்வினையைக் கடுக முடித்து இப்போதே வந்துவிடுவன் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோய்! நீ வருந்தாதே” என்று அம் முது பெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக்கவும் ஆற்றாமல் தன் கண்களில் நீர் முத்துப்போல் இடையறுந்து துளிப்பத் தலைமகள் மிகவும் வருந்துகின்றாள்.

6

(24-78) பாட்டின் பொருட்காட்சி தலைமகள் பாசறையிலிருக்கும் இருப்புக்கு மாறுகின்றது; (24-28) பாசறையின் அமைப்பு

இனி, வேனிற்காலத் துவக்கத்திற் பகைமேற் சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பரிய காட்டிலுள்ள பிடவஞ் செடிகளையும் பசிய

தூறுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண்களையும் அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமான பாடிவீடு அமைத்தமை சொல்லப்படுகின்றது.

(25-79) பாடிவீட்டினுள் அமைதிகளுந், தலைமகனுடைய உடம்புநிலை உள்ள நிலைகளும் மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.

இனி, இங்ஙனம் அமைக்கப்பட்ட பாடிவீட்டினுள்ளே தழைகள் மேல்வேய்ந்த கூரைகள் ஒழுங்காக இருக்குந் தெருவில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை கரும்பொடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும் அதிமதுரத் தழைகளையும் உண்ணாமல், அவற்றினால் நெற்றியைத் துடைத்துக்கொண்டுங், கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக்கையில் அவற்றைப் பற்றிக்கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் தோட்டியாற் குத்தியும் வடசொற்களால் அதட்டியுங் கவளம் ஊட்டுகின்றார்கள்.

இனி, அப் பாடிவீட்டினுட் பல்வகைப் படைகளும் இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ் வரண்களுக்கு இடையில் தலைமகனுக்கு ஒரு தனிவீடு சமைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/89&oldid=1578939" இலிருந்து மீள்விக்கப்பட்டது