உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

“மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க

ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர

எழுந்த கடற்றின் நன்பொன் கொழிப்ப"

65

என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம் முல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இஃது ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடைய தாயிருக்கின்றது. ஏனைப்பாட்டுக்களிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின், இது தன்னைக் கற்பார்க்கு ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயவாதென்று கருதுகின்றாம். இப் பாட்டின் நடையினால் இதனையியற்றிய ஆசிரியர் நப்பூதனார் துறவொழுக்கமும், வல்லென்ற இயல்பும், அறிவாழமும், மிக்க மனவமைதியும் உடையரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழை காலத்தையுந், தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச்செய்யுள் யாத்தமையானுந், துறவோர் கருவிகளை உவமை எடுத்துக் காட்டுதலானும் அைை அவையே தன்மையாமென்பது தெளியப்படும்.

இப் பாட்டின்கட் காணப்பட்ட பண்டைக்காலத் தமிழரின்

வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்

இவர்

இனி, இப்பாட்டினாற் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படுகின்றன. இனி நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங்கேட்டு அறியலாம் என்று நம்பினர். பகைவர் மேற் சன்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கி வந்தனர். அரசன் போர்மேற் செல்லும் போது பெண்களும் வாள்விரிந்த கச்சுடனே கூடச்சென்று பாடிவீட்டில் அவனை ஓம்பினர். பெண்மக்கள் இங்ஙனம் அரசரோடு உடன் சென்று அவனுக்குப் பணிபுரிதல் முற்காலத்துண்டென்பது வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகத்தானும் அறியப்படும். கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர். கிரீசு முதலான அயல் நாடுகளிலுள்ள யவனர் என்னுங் கம்மர்களை வரவழைத்து அருமைமிக்க பல கம்மவேலைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/98&oldid=1578949" இலிருந்து மீள்விக்கப்பட்டது