உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் - 9

முதலும் நான்கும் எதுகை பொருந்தச் செய்தும், மற்றுஞ் சில அடிகள் இரண்டிரண்டாய் முதற்சீரில் அவ்வாறு எதுகை பொருந்தக் கொளுவியும், பின்னுஞ் சிலவற்றில் அதுதானு மில்லாமல் யாத்தும் இப்பாட்டினைப் பலவகையால் ஓசையின்பம் மாறி மாறி வரத் தொடுத்தார். இன்னும் ஆங்காங்கு அமைக்கப்படும் பொருள்களுக்கு இணங்க அடிகள் மெதுவாகவும், விரைவாகவும் இடையிடையே தெற்றுப்பட்டுஞ் செல்கின்றன. பாடிவீடு இயற்றும் இடத்தில் ஓசை தெற்றுப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசறையினுள் இருக்கும் நிலையைச் சொல்லுமிடத்து ஓசை மெதுவாக நடக்கின்றது; அவன் மீண்டு விரைந்து வருமிடத்து விரைந்து போகின்றது. இவையெல்லாம் அறிவு ஒருங்கி ஆராய்ந்து உணர்ந்து கொள்க.

L

இனி, இப் பாட்டினுள் இடைச்சொற்களையும் வேற்றுமை யுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக்குறைய ஐந்நூறு சொற்களாகும்; இவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு (500) சொற்களுள் ‘நேமி’ ‘கோவலர்’ ‘படிவம்’ ‘கண்டம்’ ‘படம்’ ‘கணம்’ ‘சிந்தித்து’ ‘விசயம்’ ‘அஞ்சனம்' என்னும் ஒன்பதும் (9) வடசொற்கள்; யவனர் மிலேச்சர் இரண்டும் (2) திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்டபிறமொழிச் சொற்கள் (11) பதினொன்றேதாம். எனவே இப் பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு (2%) பிறசொற்கள் புகுந்தன என்றறிக; ஏனைய வெல்லாந் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்.

இனி, இம் முல்லைப்பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக் களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்பட வில்லையென்பது தோன்றுகின்றது.பொருநராற்றுப்படையில்

வந்த,

“துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் பராரை வேவை பருகெனத் தண்டிக்

காழிற் சுட்ட கோமூன் கொழுங்குறை”

என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது, மதுரைக்காஞ்சியிற் போந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/97&oldid=1578948" இலிருந்து மீள்விக்கப்பட்டது