உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

10. பாவும் பாட்டின் நடையும்

L

இனி, இச் செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப் பட்டதொன்றாம். இதில் ஒவ்வோர் அடியும் நான்கு சீர்களான் வகுக்கப்படுவன; ஒவ்வொரு சீரும் இரண்டு அசைக்குக் குறையாமலும் மூன்றசைக்கு மேற்படாமலும் வரும்; புலவன் தான் கருதிய அரும்பொருள்களையெல்லாம் வருத்தமின்றி எளிதாக வெளியிடுதற்கு இவ் வகவற் பாவினும் இசைவானது பிறிதில்லை. எதுகையின்பமும் மோனையின்பமுந் தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றை மொழிகளிற் போலாது தமிழில் மிகப் பெருகியிருந்தாலும், அவ் வெதுகைநயம் மோனைநயங்களையே பெரிதும் நோக்காது பழைய தமிழ்ப் புலவர்களெல்லாரும் பொருள் சென்றவழியே சொற்கள் தொடர்ந்து நிரம்பச் செய்யுட்கள் பலவும் இயற்றுவாராயினர். பொருளொழுங்கு முதிரத் தங் கருத்துக்களை இணக்கி வைத்துச் செல்லும்போது ஆங்காங்கு இடர்ப்பாடின்றி எளியவாய்த் தோன்றும் எதுகை மோனைகளையே அமைப்பர்; எதுகை மோனைகளுக்கு ஏற்பப் பொருள் பொருத்துவாரல்லர்.

பிற்காலத்தில் அகவற்பா பாடின புலவர் பெரும்பாலும் ஒவ்வோரடியிலும் முதற்சீரும் மூன்றாஞ் சீரும் எதுகை பொருந்தத் தொடுத்தார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சீர் எதுகை ணையக்கொளுவினர். அவர் செய்த அப் பாட்டுக்கள் எல்லாம் முதலிலிருந்து இறுதி வரையில் ஒரே ஒசையாய் நடந்து கேட்பார்க்கு வெறுப்புணர்வினைத் தோற்றுவியா நிற்கின்றன.

மற்றுப், பண்டைக்காலத்துப் புலவரின் அகவற் பாட்டுக்களோ பொருள் இயைபுக்கு இணங்க ஓசை மாறி மாறி நடந்து கேட்பார்க்குத் கழிபேர் உவப்புணர்வினைப் பயந்து நிற்கின்றன. இவ்வாசிரியர் நப்பூதனார், சில அடிகளில் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகை பொருந்த வைத்தும், வேறு சிலவற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/96&oldid=1578947" இலிருந்து மீள்விக்கப்பட்டது