உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் - 9

சுவைப்படாத ஒரோவொன்றனையுஞ் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார்; பாடிவீடு அமைக்கப்பட்ட தன்மையினை இவர் இன்னுஞ் சிறிது சுருக்கிக் கூறியிருந்தால் இப் பாட்டு இன்னும் பொருட்சுவை முதிர்ந்து விளங்கும். திருமுருகாற்றுப்படை முதலான ஏனைச் சில பாட்டுக்களுக்கு இம் முல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒரு சிறிது தாழ்ந்தது போலுமென அவை தம்மை ஒப்பு நோக்கிக் கற்பார்க்கு ஒருகாற் றோன்றினுந் தோன்றும். என்றாலும் இப் பாட்டின்கட் கண்ட பொருட் கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் விழுப்பம் வாய்ந்து மிளிர்கின்றமை காண்மின்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/95&oldid=1578946" இலிருந்து மீள்விக்கப்பட்டது