பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. நீங்க ஒரு .ெ பரி ய ஜட்ஜ், இதையெல்லாம் நம்ப லாமா' என்றுதான் சொல்லிவிட்டு வந்தேன். ஆளுல் இதில் ஒரு பெரிய நாடகமே நடந்திருக்கிறது என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. சாமு அவள் அறையில் இல்லை. கோபி யின் அறையும் வெளியே பூட்டியிருந்தது. தனித்தனியாக, இருந்த கோபியின் படமும் காமுவின் படமும் ஒ ன் ரு க இணைந்து தொங்கவிடப்பட்டிருந்தன. எனக்கு முடிவு தெரிந்து விட்டது. இதைப்போய் நான் யாரிடம் சொல்வது? கேட்ப வர்களுக்கெல்லாம் கோபி மீண்டும் லண்டனுக்கப் போயி ருக்கான்னு சொன்னேன். காமு எங்கே என்று கேட்டால் மகனுக்குச் சமைத்துப்போட, கூட அனுப்பியிருக்கிறேன் என்று சொன்னேன். இதைத்தான் கெளரவமாக என்னல், சொல்ல முடிந்தது. ஒரு வருஷத்திற்குப் பிறகு லண்டனிலிருந்து எனக்கு ஒரு புகைப்படம் வந்தது. அழகிய ஆண் பிள்ளையை மடியில் வைத் துக்கொண்டு காமு உட்கார்ந்திருக்க, அவளுக்குப் பக்கத்தில் கோபி நிற்க, அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. எனக்கு மனதிலே தீ மூண்டாலும் ஒரு வகையில் எனக்குச் சந்தோ ஷ்ம் தான். என் மகன் அலியல்ல என்பது நிரூபணமாகிவிட்ட தல்லவா! இந்தப் படத்தை ஜட்ஜ் ஜெகனதனுக்கு அனுப்ப வேண்டுமென நினைத்தேன். ஆனால் மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதே. - உண்மையை மிஞ்சி வாதத்தினலே ஜெயிக்குற பெரிய கிரிமினல் வக்கீலெல்லாம் கடைசி காலத்திலே ஏதாவது மனச் சஞ்சலத்திலே த ன் கண்ணை மூடுவாங்கன்னு ஒரு அட்வகேட் ஜென்ரல் எனச்குச் சொன்னது அடிக்கடி என்னை உறுத்திக்கொண்டேயிருந்தது. அது இப்ப பலிச்சுப்போச்சு. திறமைக்கும் உண்மைக்கும் நடக் கி ற போட்டியிலே திறமை ஜெயிக்கிற மாதிரி முதல்லே தெரியும், ஆனல் அது பொய்! உண்மைதான் ஜெயிக்கும். - . . . . 女 108°