பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதுமா? எனக்கு மட்டும் மரபு என்ன வேண்டிக் கிடக்கு? தென்னே மரத்திலே இளநீரும் கிடைக்கிறது. புத்தியைக் கெடுக்கும் மதுவும் கிடைக்கிறது. அதைப்போல் மனித மனத் தில் மனிதத் தன்மையும் மிருகத்தனமும் தனித்தனியாக ஒளிந்து கிடக்கின்றன. எது வலிமை பெறுகிறதோ அது வென்று விடுகிறது. என்னை ஒருவன் கோழையென்ருல் அவன் எதிரிலேயே நான் பலசாலியென்று நிரூபிக்க தோன்றுகிறது. அதைப்போல் எ ன் னே ஒருத்தி அலியென்ருல் அவளிடத்தி லேயே நான் ஒரு ஆண்மையுள்ளவன் எ ன் று நிரூபித்துக் காட்ட நினைப்பதில் என்ன தவறு? இது தவறென்ருல் ஒரு பெண் சமவயதுள்ள ஒரு ஆடவனிடத்தில் அவனே அலி யென்று இடித்துக் காட்டுவது சரியென்று எந்த மடையனும் சொல்ல மாட்டான். இது சரியென்ருல் என் கருத்தும் சரி தான. பிச்சாழ்வார் தர்மம் என்று ஒன்று இருக்கிறது. அது ஆடிக்கடி ஆடிக் கொண்டிருக்காது. எப்போதாவதுதான் அது வேலை செய்யும். ஆளுல் குறித்த நேரத்தில் அது வேலை செய்தே தீரும். என் வாழ்நாளிலேயே நான் இதை அனுபவப் பூர்வமாக அனு. பவித்து வி ட் டேன். கோபிபைச் சொல்லிக் குற்றமில்லை. அதைப் போல் காமுவைச் சொல்லியும் குற்றமில்லை. நான் செய்த தீவினைகள் எனக்கு விரோதமாக வேலை செய்து விட் Löös, கோபி மேல்நாட்டிலிருந்து வந்தவுடனேயே விதி வேலை செய்யத் தொடங்கி விட்டது. அவனும் அவளும் சந்தித்துக் கொள்ளவில்லை. பின் எப்படி ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் வந்தது? எத்தனையோ கொலை வழக்குகளில் ஊகித்து உண் மையை அறிந்து கொண்ட நான் என் வீட்டில் நடந்த விவ காரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. நான் ஜட்ஜ் ஜக தைன் ஊருக்குப் போய் விட்டுத் திரும்பினேன். அங்கே போன பிறகுதான் தனக்கு வந்த மொட்டைக் கடிதத்தைப் பற்றி ஜட்ஜ் சொன்னர். அப்போது கூட என் புத்தியில் பட 107."