பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பொண்ணு பார்க்கப் போறதா இருந்தேன். புறப் படப் போகும் போது பொண்ணு வீட்டிலே இருந்து வர வேண்டாம்’னு லெட்டர் வந்ததா சொன்னங்க. அதிலே கூட எனக்கு நிம்மதிதான். ஆனால் அதிலே ஒரு பாலிடிக்ஸ் இருக்கு துன்னு தெரிஞ்சப்புறம்தான் எனக்கே ரோஷம் வந்தது. இது எனக்கு எப்படி தெரிந்தது? நான் டவுனுக்குள்ளே போய்ட்டு என் அறைக்கு வந்தேன். என் அறையிலே ஜன்னல் வழியே துக்கியெறியப்பட்ட க டி த ம் ஒன்று கிடந்தது. பிரிச்சுப் பார்த்தேன். என் தலையே வெடிச்சுடும் போல இருந்தது. அதுலே 'அன்புள்ள கோபிக்கு, உனக்கு எந்தப் பெண்ணும் கிடைக்காது. என் பாவம் உன்னைச் சும்மா விடாது. எங்கே உனக்குப் பெண் பார்த்தா லும் அங்கே வந்து நான் சனியனுக நிற்பேன். நீ ஆண்மை யற்ற அலி என நான் தீர்மானித்திருக்கிறேன். எ ன் னை ப் போன்ற ஒரு அழகிய பெண்ணை விரும்பாத:மனிதன் ஒரு அலியாகத்தா னிருக்க முடியும். இதைத்தான் பெண் வீட்டா ருக்கு மொட்டைக் கடிதமாக எழுதிப்போட்டேன், நா ன் கூறியிருப்பது உண்மையல்ல என்று நிரூபிப்பதற்கு உனக்கு வாய்ப்புக்களே இல்லை. என்னைத் தவிர, இந்தச் சபதத்தில் யார் வெற்றிப் பெற போகிருர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இப்படிக்கு, காமு. ஒரு பெண் தன்னுடைய விருப்பத்திற்காக மரபுகளையும் சம்பிரதாயங்களையும் உடைத்தெறிகிருள், இதையே ஒரு ஏழைப் பெண் செய்திருந்தால் அவளைச் சுட்டுக் கொன்று விடுவார்கள். எங்களைப் போன்ற பணக்காரர்கள் வீட்டில் இப்படி நடந்தால் அது ராயல் பேமிலி. அதெல்லாம் சக ஜம்'-என்கிருர்கள். நான் மட்டும் இதற்கு ஏன் விதிவிலக் காக இருக்க வேண்டும்? நான் ஒ ழு ங் கா. க இருந்தால் 106