பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலி' என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் மொட்டைக் கடிதமாகக் கூட இருக்கலாம். ஆனல் எ ல் லா மொட்டைக் கடிதத்தையும் புறக்கணிச்சுட முடி யுமா? கலியாணம்கிறது ஒரு நாள் கூத்து மாதிரியல்ல. ஒரு மனுஷன் அவன் சரித்திரத்தை எழுதக் கூடிய பிரச்னை. அத ஞ்லேதான் அவசரப்படாமல் இருக்கலாம்னு நெனேச்சு பிரதி வாதி பயங்கரத்திற்கு ஒரு கடிதாசி எழுதிப் போட்டேன். ஆனல் அவரு என்ன நினைச்சரோ தெரியலே. என்ன நினைச் சிருப்பாரு. மோச ம் பண்ணிட்டாங்க. ஜட்ஜ் ஜகனதன் காசுக்கு ஆசைப்பட்டு .ெ பாண் ண வெறெங்காவது விலை பேசிட்டான்னு நினைச்சிருப்பாரு. கோபிநாத் முதல் காதல் முற்றிலும் தோல்வியாகுமென்று ஷேக்ஸ் பியர் சொன்னர். ஏன் அப்படிச் சொன்னர்? மனிதர்கள் எல்லோருமே அவசரப்பட்டு பருவம் வந்தவுடனே யாரை யாவது காதலிச்சு தோத்துப் போயிடுருங்க. மகாகவிஷேக்ஸ் பியர் கூட அப்படித்தானே? இல்லாட்டி அவர் ஏன் அப்படிச் சொல்லி வைக்கனும்? நல்ல வேளை. ஷேக்ஸ்பியருக்கு முதல் கா த ல் தோல்வியடைந்தது உலகத்திற்கு உண்மையைச் சொல்ல உதவிற்று. அதே ஷேக்ஸ்பியர் முதல் காதல்லே வெற்றியடைந்திருந்தா அவர் சொன்ன ஒரு உண்மை பொய் யாகியிருக்கும். ஏன் தெரியுமா? எந்தக் கவியும் ஒரு பொண் ணுேட நின்னதில்லை. மகாகவி மட்டும் எப்படி முதல் காதலி லேயே நின்றிருக்க முடியும்? - என் கதை இதுவரை யாரும் எழுதாத கதை, நான் படிக் கிற காலத்திலே காமுவைக் காதலிக்கலே. ஆ ைல் அவள் என்னைக் காதலிச்சா. நான் முடியாதுன்னு சொன்னேன். அவள் விடமாட்டேன்னு சொன்னாள். நான் லண்டனுக்குப் போனேன். அவ என் வீட்டுக்கே வந்திட்டா. அவளே ப் பொறுத்த வரைக்கும் முதல் காதல் தோல்வி. ஆனல் அவள் தோல்வியையே வெற்றியாக்க சதி செய்திட்டா. 105