பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லை. மனம் சரியாக இல்லாதபோது மனிதன் எதையும் ரசிக்க முடியாது. கோபமாக இருந்தாலே சாப் பிட முடிவதில்லை. கோபம் என்கிற போதை தணிகிறவரை குழந்தைகளின் குமிழ் சிரிப்புக்கூட மனதுக்குக் குளிர்ச்சி தருவதில்லை. கண்ணப்பன் இப்படி பதில் சொன்னன். விட்டில் அண்ணியார் இல்லையா? ஊருக்குப் போனவள் கள் இன்னும் திரும்பவில்லையோ?” சசி பேச்சை மாற்றினன். "பெண்கள் தாய் வீட்டுக்குப் போனலே இப்படித்தானே! அவர்களது பழைய நினைவுகள் மறையவே பத்து நாட்களாகும். சிறுமியாக இருந்த போது சிட்டிவைத்து விளையாடியதிலிருந்து செப்புக்குடம் எடுத்து சேங்ை கக்குப்போன காலம் வரை பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவார்கள்!” என்ருன் கண்ணப்பன். கசரி, இன்று நீங்கள் சோகமாக இருப்பதற்கு என்ன கார ணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? கவலைகள் பலவிதம் உண்டு சசி, பிறர்தலையிட்டால் தீர்ந்து விடக்கூடிய கவலைகளும் உண்டு. யார் தலையிட்டாலும் திராத கவலைகளும் உண்டு. இதில் என் கவலே இரண்டாவது வகை. இந்தத் திருவிதாங்கூர் மன்னரே வந்தாலும் என் கவலையைத் தீர்க்க முடியாது. தானக அந்தக் க வ லை கரைந்தாலொழிய அல்லது நாகை மடிந்தாலொழிய என் கவலை தீரவே தீராது: என்ருன் கண்ணப்பன். - . "கவலைகள் என்பது எல்லோர் மனத்திற்கும் பொதுவான துதான். எப்பேர்ப்பட்ட கவலைக்கும் குறிப்பிட்ட ஆயுள் தான் உண்டு! நாள் செல்லச் செல்ல அதன் வேகம் தானுகக் குறைந்து விடும். இரண்டு வருஷங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் திடீ ரென்று புகுந்த கவலை இப்போது தணிந்து விட்டது. எங்கள் குடும்பத்தில் அனைவருமே அன்று தற்கொலை செய்து கொண்டு மடித்து விடலாம் என்றுதான் நினைத்தோம். பிறகு எப்படியோ நாங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் அடைந்து விட் டோம்" என்ருன் சசி. - - . . . 38