பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் மிகவும் மோசமானவர்கள். அதிலும் ஏமாற்ற மடைந்த பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அற்ப ஆசைக் காக அரசாங்கத்தையே கவிழ்ப்பவர்கள் என்பதால்தான் முனி வர்களே அவர்களைச் சாடியிருக்கிரு.ர்கள்' . - -இப்படி கிறுகிறுத்துப் போனன் கண்ணப்பன். அப்போது அவன் கொச்சி நண்பன் சசிகுமார் உள்ளே நுழைந்தான். - சசிகுமார், கண்ணப்பனுக்குக் கிடைத்த கொச்சி நண்பன். அவன், ஒரு தமிழ் பெண்ணுக்கும் ஒரு மலையாளிக்கும் பிறந்த வன். அவனுடைய தந்தை தமிழ் நாட்டில் அதிகாரியாக இருந்த போது அங்கேயே ஒரு பேராசிரியையைத் திருமணம் செய்து கொண்டார். அவரது சொந்த ஊர் எர்ணுகுளம். பதவிக்காலம் முடிந்ததும் அவர் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார். சசிகுமாருக்குத் தமிழும் தெரியும், மலையாளமும் தெரியும். அவனும் கொச்சித்துறைமுகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந் தான். கண்ணப்பனின் தமிழ்ப்பற்று சசிகுமாரைக் கவர்ந்ததால் சசி அவனுக்கு உற்ற நண்பனுகிவிட்டான். கல்யாணமாகாத ஆனும், பெண்ணும் சந்தித்தால் அது காதலாகிவிடுகிறது. ஆகாவிட்டாலும் உலகம் அதைக் காதல் என்றே சொல்லிவிடும். ஆனல் இரண்டு ஆடவர்கள் சந்தித் தால் அதைப்பற்றி உலகம் கவலைப்படுவதே இல்லை. சசி அன்று வீட்டுக்குள் நுழைந்தபோது கண்ணப்பனிட மிருந்து என்றும் போல் வரவேற்பு கிடைக்கவில்லை. "சசி, இன்று என் மனம் சரியில்லை. என்னவோ போல் இருக் கிறது. சூரியோதயத்திலிருந்து பத்துநாழிகைவரை மனம் நிம் மதியாக இருந்துவிட்டால் அன்று முழுவதும் கவலை அணுகாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிருர்கள். ஆனால், நேற்று மாலையிலேயே என்னைத் துக் கம் முற்றுகையிட்டு விட்டது” என்ருன் கண்ணப்பன். - "நல்ல நூல்களைப் புரட்டினல் எல்லாம் சரியாகிவிடும்' "இந்த யோசனையை என்றைக்கும் நான் ஏற்றுக் கொண்ட 37