பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்படி ஒன்றுமில்லை எல்லோரும் என்ன இங்கு வந்ததும் இப்படித்தான் கேட்கிருர்கள். எனக்கு ஏதாவது வியாதி இருந் தால்தானே வைத்தியம் செய்து கொள்வதற்கு? அப்போதுதான் கண்ணப்பன் விளங்கிக் கொண்டான்! சொக்கநாதன் நன்ருகக் குடித்திருந்தான். அவன் பேசும் போது சாராய நெடி கண்ணப்பனின் மூக்கைத் துளைத்தது. சுபத்ரா! இவள் அழகானவள், மிகவும் அழகானவள். அவள் தோற் றம் காண்போர்களே உறுத்தக் கூடியது. சுபத்ரா பி. ஏ. பட்டம் பெற்று விட்டு வேலைக்காகக்காத்திருந்தாள். சுபத்ரா இசையிலும் வல்லவள். சின்ன வயதிலேயே அவள் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டாள். பொழுது போகாத நேரங்களில் புத்தகம் படிப்பதைப்போல அவள் வயலின் வாசித் துக் கொண்டே இருப்பாள். ஒருநாள் அவளுக்கு திடீரென்று திருவனந்தபுரத்திலிருந்து ஒரு இண்டர்வியூ வந்தது. மறுநாளே அவள் திருவனந்தபுரத் துக்குப் புறப்பட ஆயத்தமானுள். அவளுடைய அண்ணன் சசி குமார் சுபத்ராவை திருவனந்தபுரத்திற்கு அனுப்பிவைத்தான். சுபத்ரா பகல் நேரத்தில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தாள். அவள் வந்ததும் வராததுமாக இண்டர்வியூக்குக் கிளம்பினள். சுபத்ரா, திருவனந்தபுரத்திற்குப் புதியவளாக, வெளி யூரே போயிராத வெகுளியாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றினுள். டேவிட்!” ‘என்ன பாஸ்?’’. 'மான் மருளுவதைப் பார்த்தாயா?” "இளங்கன்று பாஸ்! துருதுருவென்று இருக்கும் இருவிழிகள் தொட்டால் சிவக்கும் பருவப்பதுமை!” 45