பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தனை மாங்கன்றுகளில் எந்த மாங்கன்றுக்கு அடியில் பிணத்த்ைப் புதைத்திருப்பார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது இன்னசிமுத்து கோஷ்டிக்கு அடுத்த குழப்பமாக இருந்தது. எந்தத் துறையிலும் திறமைசாலிகள் இல்லாமலில்லை. அதி லும் தமிழ்நாட்டின் காவல் துறையில் திறமைசாலிகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டதில்லை. கை விளக்கால் ஒரு முறை அந்த வயலை துழாவிப் பார்த்த இன்னசிமுத்து குறிப்பிட்ட ஒரு மாங்கன்று அருகில் நின்று கொண்டு இந்தக் கன்றைத் தோண்டிப் பார்க்க லாம் என்ருர். அந்தக் கன்றைச் சுற்றி அழகாகப் பாத்திகட்டி புல் பூண்டுகளையெல்லாம் செதுக்கி வைத்திருந்ததால் இன்னசி முத்துக்கு அந்தக் கன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. வெட்டியான் வியர்க்க வியர்க்கத் தோண்டினன். அவரு டைய கணக்கும், உழைப்பும் வீண்போகவில்லை. சிறிது ந்ேர்த் திற்குள்ளாக துர்நாற்றம் கிளம்பிவிட்டது. போலீசுக்காரர்கள் உற்சாகமாக வெட்ட ஆரம்பித்தார்கள். அடுத்து நீண்ட கருங் கூந்தல் மண்வெட்டித்தகட்டைப் பின்னிக்கொண்டு வெளியே வந்தது. அதற்குப்பிறகு வெட்டுவதை நிறுத்திவிட்டு, எல்லோரு மாகச் சேர்ந்து கையில் தோண்டத் தொடங்கினர்கள். அரை மணிநேரத்திற்குள்ளாக அவர்களுக்கு உருவம் கிடைத்துவிட் டது. அழுகியும், அழுகாமலுமாக ஒரு பெண்ணின் பிரேதம் தோண்டியெடுக்கப்பட்டது. நடுத்தர வயதுடைய ஆந்தப்பெண் தங்க விக்கிரம் போலிருந்தாள். நைந்து பிதிர்ந்துபோன வாயில் புடவை அவள் அணிந்திருந்தாள். வெயிலில் காய்ந்த வாழை யிலையைப் போல அவள் உடம்பின் பசுமை வற்றிப் போயிருந் தது. அவள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தாளா அல்லது விஷம் கொடுத்துச் கொல்லப்பட்டிருந்தாள்ா என்று போலீசு கோஷ்டியால் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த் சடல்த்தின் எந்த இடத்திலும் வெட்டுக்காயங்கள் இல்லை. பிரேதத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். ஒன்றும் புலப்படவில்லை. அவளது வலது கரத்தில் ஒரு பச்சை குத்தியிருந்தது. தசரதச் 69