பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதித்துப் பார்த்து விடுவது என்று அவர் முடிவு செய்து விட் டார். ஆனல் அந்த இடத்திற்கு எப்போது போவது, எப்படிப் போவது என்பதை அவர் தீர்மானிப்பதில் தடுமாற்றம் அடைந் திருந்தார். தான் அந்த இடத்திற்குப் போகப் போகிற விஷயம் ஸ்டேஷனில் யாருக்கும் தெரியக் கூடாது என்று அவர் விரும் பினர். ஏனென்ருல் போலீசு ஸ்டேஷனில் உள்ள ஒவ்வொரு கதவும் பேசக் கூடியது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அன்று இரவு அந்த இடத்திற்குப் போவது என்று தீர்மா னித்து விட்டார். அதனல் அன்று காலையிலிருந்தே அவர் ஸ்டேஷ னுக்குப் போகவில்லை. தன்னுடையதிட்டத்தின் ஒரு சிறு அசைவு கூட அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதில் இன்னசி முத்து மிகுந்த அக்கறையோடிருந்தார். அதனல்தான் அவர் கான்ஸ்டபிளிலிருந்து இன்ஸ்பெக்டர் ஆகியிருந்தார். இன்னசி முத்துக்கு அவரது மேலிடத்தில் நல்ல மதிப்பு இருந்தது. சூரியன் அஸ்தமனமாகி விட்டது. மேலதிகாரிகளுக்கு எழுதி வெளியூரிலிருந்து ஐந்து போலீசுக்காரர்களை ரகசியமாக வர வழைத்துக்கொண்டு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த மாங் கொல்லைக்குப் புறப்பட்டார். யாரும் போலீசு உடை அணிய வில்லை. இன்னசி முத்து தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு மிராசுதாரைப் போலவும், கான்ஸ்டபிள்கள் அவரது நண் பர்களைப் போலவும், அவர் பின்னல் சென்ருர்கள். இடத்தைத் தோண்டிப் பார்ப்பதற்கு ஒரேயொரு வெட்டியான உடன் அழைத்துச் சென்ருர்கள். நல்ல இருட்டு ஒருவர் முகம் ஒருவருக் குத்தெரியவில்லை. இன்னசிமுத்து கையில் வைத்திருந்த பாட்டரி விளக்கின் உதவியால் அனைவரும் மாங்கொல்லைக்குள் இறங்கி ஞர்கள். - . - - - இன்னசிமுத்து துப்பறிவதில் ஆற்றல் பெற்றவர். அந்த இடத்தைப் பார்த்ததும் தனக்கு வந்த கடிதங்களில் ஏதோ ஒரு உண்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்தார். ஏனென்ருல் ஒரு நல்ல நெல் வயலில் திட்டமிடப்பட்டுத் திடீ. ரென்று இருபத்தைந்து மாங்கன்றுகள் வைக்கப்பட்டிருந்தது தான் இன்னசிமுத்துவிற்குச் சந்தேகத்தைத் தூண்டியது. அந்த 68