பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்த கண்ணப்பனுக்கு அன்று தெளிவாகப் புரிந்து விட்டது. N. "உன் ம ன க் குறை லேசானதில்லை கண்ணு உன்னைப் போன்றவர்களுக்காகத்தான் 'சுவீகாரம் என்ற முறையை நம் ஜாதிக்காரர்கள் பின்பற்றி வருகிருர்கள்!” என்று கண்ணப்பன், கண்ணுவுக்கு ஆறுதல் சொன்னன். சமாதானம் சொல்லும் கணவனது ஆறுதல் மொழிகள் அந்த நேரத்திற்கு வேண்டுமா ல்ை சங்கீதமாகத் தெரியலாம். ஆனல் அதையே மனக்குறை அகற்றும் மாமருந்தாக எந்தப் பெண்ணும் எடுத்துக்கொள்வ கோயிலூர்! ஒரு பெண் தெய்வத்தின் ஆலயத்தைச் சுற்றி அந்த ஊர் அமைந்திருந்தது. செட்டிநாட்டில் பெரும்பாலான சிற்றுார்கள் அப்படித் தான் அமைந்திருக்கும். - கோயிலின் முன்வாசல் மண்டபம் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கல் தூண்களால் நிறுவப்பட்டிந்தது. கோடைகால மாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும் சரி-அந்த ஊர் மக்கள் ஒய்வு நேரத்தை அந்தக் கல் மண்டபத்தில்தான் கழிப்பார்கள். கோயிலுக்கு எதிரே ஒரு அழகான தெப்பக்குளம். செம் மண் கலந்த சுவையான அந்த நீர்த்தடாகத்தின் நடுவே ஒரு மையமண்டபம். ஒரு பக்கத்திலே சிறிய கடை வீதி, இன்னொரு பக்கத்திலே பெரிய திறந்தவெளி மைதானம், அந்தக் கோயி லுக்கு ராஜகோபுரம் இல்லா விட்டாலும் அருகில் வந்து பார்ப் போருக்கு அந்தப் பெண் தெய்வத்திற்கு ஏதோ ஒரு பூர்வீக வரலாறு இருப்பதுபோலவே தோன்றும். மற்ற இந்துக் கோயில் களில் இருப்பதுபோல இந்தக்கோயிலில் கம்பத்தடி கிடையாது. நந்தி இல்லை. கோயில் வாசல் கதவைத் திறந்ததும் மூலஸ் தானத்தைத் தரிசித்து விடலாம். - - இந்தக் கோயில் இந்து அறநிலையத் துறைக்குக் கட்டுப்பட்ட தென்ருலும், சிவகங்கை சமஸ்தானத்தின் நேரடி மேற்பார்வை யில் இயங்கி வந்தது. Ꮾ