பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலடி பெற்ற பிள்ளை குண்ணுவின் கடைவிழிகளில் மலரத் துடிக்கும் மொட்டு களைப் போலக் கண்ணிர்த் துளிகள் ததும்பி நின்றன. ஒரு நாள் கூட கண்ணு இவ்வளவு மனச்சங்கடத்தைத் தாங்கிக் கொண்டி ருந்ததில்லை. அன்று மட்டும் அவள் அடங்காத் துயரத்திற்கு ஆளாகித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். 'கண்ணு!' முகப்புக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்தக் குரலைத்தான் கண்ணு நெடுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தக் குரல் பிருந்தா வனத்திலிருந்த கண்ணனின் குரலைப் போல் அவள் மனதுக்குப் பட்டது. புருஷனின் குரல் எவ்வளவுதான் கரகரப்பாக இருந் தாலும் மனைவிக்கு அதுதானே புல்லாங்குழல் இசை! "என்ன கண்ணு ஒரு மாதிரியாக இருக்கிருய்? கண்ணு பதில் பேசாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள். கண்ணப்பன் அவளைத் தழுவியபடி அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான். - உள்ளே போனதும் படுக்கை அறையிலுள்ள இரட்டைக் க ட் டி லி ல் அவள் குப்புறப் படுத்துக்கொண்டு கோ என்று கதறினுள். "என்ன கண்ணு இதெல்லாம்? உன் அத்தைக்குத் தெரிந் தால் ஒரு மாதிரியாகப் பேசுவார்கள். விஷயத்தைச் சொல்லு!' “எத்தனையோ முறை ஜாடை, மாடையாக உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் புரிந்து கொள்வதில்லை. இன் ைற க் கு வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள். கண்ணுத்தாள் அடிக்கடி ஏன் கண்கலங்கி நிற்கிருள்? இதற் காக இருக்குமோ, அதற்காக இருக்குமோ என்று குழம்பிக் 法。