பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையிலுள்ள தசரதச் சக்கரவர்த்தி என்ற பச்சை எழுத்துக்கள் தாம். அருந்ததிக்கு எடுத்துப்பேச ஆளில்லை. திருச்செந்தூர் முரு கனத்தவிர அவளுக்குச் சாட்சியில்லை. கலப்பு மணம் அதிகாரப் பூர்வமற்றது என்று பேசப்பட்ட காலம் அது. அதேைல அவள் எச்சில் இலையாகத் தூக்கியெறியப்பட்டு வாலிபர்களுக்கு வியா பார விருந்தாக ஆகி விட்டாள். தசரதன் செட்டியார் அவரது மு ைற ப் பெண் ண த் திருமணம் செய்து கொண்டார். அவருடைய இரண்டாவது மனேவி தசரதன் செட்டியாருக்கு அருந்ததியின் நினைவை மாற்ற எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும் அவரது கையிலுள்ள அருந்ததி என்ற பெயரை மாற்றமுடியவில்லை. குளிக்கும்போதும் கடிகாரத்தில் மணி பார்க்கும் போதும் அருந்ததி என்ற எழுத் துக்கள் அவரை மட்டுமல்ல அவரது இரண்டாவது மனைவியை யும் உறுத்திக்கொண்டிருந்தன. “அருந்ததி எங்கோ இருக்கிருள். உயிரோடுதான் இருப் பாள். எப்போதாவது ஒரு நாள் அவளைச் சந்திக்க வேண்டிய கட்டம் வரலாம். அப்போது அவள் நம்மைப்பற்றி என்ன நினைப் பாள்!” என்ற பீதி தசரதன் செட்டியாரின் மனத்தில் வளர்ந்து கொண்டுதானிருந்தது. * - . . - அவர் பயந்தது நடந்து விட்டது. திடீரென்று ஒரு நாள் பொழுது சாய்ந்த நேரத்தில் செட்டியார் வீட்டிற்கு அருந்ததி வந்துவிட்டாள். செட்டியாருக்குக் கைக்ால்களெல்லாம் உணர் விழந்து விட்டன. என்ன பேசுவது என்றே அவருக்குத் தெரிய வில்லை. குற்றம் செய்தவர்களின் முகத்தைப்போல அ வ ர து முகம் ரத்த ஒட்டமின்றி வெளிறிவிட்டது. "இப்படி நீ வரலாமா? இது உனக்கும் நல்லதில்லை, எனக் கும் நல்லதில்லை.” - "நான் உங்களுக்குத் தொல்லையைத் தருவதற்கு வரவில்லை எப்படியோ நான் கெட்டுவிட்டேன். என் உட்ம்பும் கெட்டுப் போய் விட்டது. : 75