பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதையில் தசரதன் பெயரை அருந்ததியும், அருந்ததியின் பெயரை தசரதனும் கைகளில் பச்சை குத்திக் கொண்டார்கள். செட்டியார் தனி வீடு பிடித்து அதில் அருந்ததியைக் குடி யமர்த்தினர். - அவருக்கு முறைப்பெண் ஒன்று இருந்தது, அந்தப் பெண் யே அவர் தி ரும ணம் செய்து கொள்ள வேண்டுமென்று செட்டியாரின் தாய் மாமன் அச்சுறுத்திக் கொண்டிருந்தார். ஆனல் செட்டியார் அருந்ததியின் அன்பான உபசரிப்பில் நிம் மதியாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். தசரதன் செட்டியரை அருந்ததியின் பிடிப்பிலிருந்து விடுவிக்க முடியா தென்றுணர்ந்த அவரது தாய் மாமன் அருந்தியின் மீது எப்படி யாவது களங்கம் கற்பிக்க வேண்டுமென்று தீவிரமாக முனைந் திருந்தார். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு செட்டியாரின் மாமனுக் குக் கிடைத்துவிட்டது. ஒரு முறை அருந்ததி அவளுடைய தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவள் சொன்னபடி திரும்பி வர வில்லை. இதை ஒரு சாக்காக வைத்துத் தசரதன் செட்டியாரிடம் அவளைப்பற்றி அபாண்டமாகப்பழிகளைச் சுமத்தினர். அருந்ததி அவளது சொந்த ஊர்ப் பக்கத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டி யார் பலரிடம் காசுக்காகக் கள்ள உறவு வைத் திருப்பதாகவும், அதனால்தான் அவள் அடிக்கடி சொந்த ஊருக்குப் போவதாக வும் ஒரு கட்டுக்கதையைத் தயார்செய்து தசரதன் செட்டியார் நம்பும்படி அவரது மாமன் வெற்றிகரமாகச் செய்து விட்டார். இப்போது செட்டியாருக்கும் அருந்ததிக்கும் உறவில்லை. அருந்ததி மதுரையில் குடியேறிவிட்டாள். ஆடவர்கள் பிழைக்க வழியில்லா விட்டால் திருட ஆரம்பிக்கிருர்கள், பெண் க ள் பிழைக்க வழியில்லாவிட்டால் கற்பை விற்கிரு.ர்கள் பாவம்! . காதலுக்காக பெற்ருேரைக் கூடத் துச்சமென மதித்த அருந்ததி இப்போது இரவு ராணியாகிவிட்டாள். அவளுடைய வாழ்க்கை இப்படி அமையுமென்று அவள் கனவு கூடக் கண்டி ருக்கமாட்ட்ாள். காதலில் மூழ்கி அவள் கண்ட சுகம் அவளது 74