பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இந்த உரையாடல் பலகாரக்கடையில் பத்துத் தேய்க் கும் வேலைக்காரியிருந்து படித்தவர்கள் மட்டம் வரை பரவி நகரமே புடைத்துப் போய்விட்டது. வீடுகளில் வைக்கப்படுவதைப்போல அரசு அலுவலகங்களி லும் ஜன்னல் வைக்கப்படுகின்றது. ஆனல் அலுவலக ஜன்னல் கள் காற்ருேட்டத்திற்குப் பயன்படுவதைவிட ரகசியங்களே வெளியே அனுப்புவதற்குத்தான் பயன்படுகிறது. இல்லாவிட் டால் தசரதன் செட்டியாரை ஸ் டே ஷ னு க் கு அழைத்துக் கொண்டு போனதும் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய் யப்பட்டதும் அரை நொடிக்குள் நகரில் பரவியிருக்க முடியுமா? இன்ஸ்பெக்டர் இன்னசிமுத்து இரவு பகலாக உழைத்துத் துப்புக்கண்டுபிடித்து விட்டார். அவர் கண்டுபிடித்தது முற்றி லும் உண்மை என்பதற்கு ஆதாரமாக தசரதன் செட்டியாரு டைய இடது கையில் அருந்ததி என்று பச்சை குத்தப்பட்டிருந் தது. கொலை செய்யப்பட்ட அழகியின் பெயர்தான் அருந்ததி, “அருந்ததி செட்டி நாட்டுப் பகுதியைச்சேர்ந்தவள். சின்ன வயதிலேயே அவள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருந்தாள் தசரதன் செட்டியார் வியாபாரத்திற்குச் செட்டி நாட் டு ப் பகுதிக்குச் சென்றபோது அருந்ததியின் நட்புக் கிடைத்தது. செட்டியார் எப்போதும் தங்கும் விடுதியின் அடுத்த வீடுதான். அருந்ததியின் வீடு. கல்யாணமாகாத ஒரு வாலிபன் த ன் னே. விரும்பினல் அவன்மீது முழுநம்பிக்கை வைத்துவிடுவது தமிழ் நாட்டுப் பெண்களிடமிருந்துவ்ரும் ஒரு கெட்டபழக்கம். அதைப் போலவே, கலியாணமாகாத ஒரு பெண்ணின் மீது ஆசை வைத் தால் பழங்களே பார்த்துவிட்டு ஓடி விடும் அணிலைப் போல் தப்பித்துவிடலாம் என்ற விஷப் புத் தி தொன்றுதொட்டு இளைஞர் மத்தியில் இருந்துவருகிறது. இவ்வாறு பாசத்திற்கும், பாஷானத் தி ற் கு ம் இடையில் சிக்கிக் கொண்டவள்தான் அருந்ததி. தசரதன் செட்டியார் அருந்ததியைத் திருமணம் செய்து. கொள்வதாய் வாக்குறுதியளித்து திருச்செந்தூர் முரு க ன், கோயிலில் மாலை மாற் றிக்கொண்டார், அங்கேயே காதல் 73