பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகுந்த உற்சாகத்தோடு செட்டியார் இன்ஸ்பெக்டரை வர வேற்ருர். பெண்ணின் சிரிப்பைக் காட்டிலும் போலீசின் சிரிப்புக்குப் பலவீனம் அதிகம் என்பதை உணர்ந்த இன்னசிமுத்து செட்டி யாரின் உபசரிப்புக்கு எதுவும் பதில் சொல்லாமல் புருவத்தை நெறித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். செட்டியாருக்கு மனம் சுருக்கென்றது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. "நீங்கள் இன்றைக்கு இந்தப் புத்தாடை அணிந்து கொள்ளவேண்டும். உங்களுக்காகவே வாங்கி வந்திருக்கிறேன். செட்டியாரின் பேச்சை இன்ஸ்பெக் டர் காது கொடுத்துக் கேட்கவில்லை. - எனக்குத் தீபாவளி கிடையாது. நான் வேதகாரன்...... மேலும் நான் வந்த விஷயம் வேறு நீங்கள் கொஞ்சம் ஸ்டேஷன் வரை வந்துவிட்டு வரவேண்டும்.” ‘அப்படியா! ஆயுதபூஜையன்றைக்குத்தானே ஸ்டேஷனி லேயே விழாக் கொண்டாடுவார்கள்! நீங்கள் வந்து தீபாவளிக் கும் விழாக்கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறீர்களா இதோ: வந்துவிடுகிறேன்” - என்று கூறிவிட்டு, உள்ளே போய் ஒரு பட்டுச் சால்வையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு செட்டியார் இன்ஸ்பெக்டருடன் வெளியே கிளம்பினர். மாலையிலேயே நகரில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. தெரு வில் ஒருவரையொருவர் சந்திக்கிறவர்கள் தசரதன் செட்டியா ரைப்பற்றியே பேச ஆரம்பித்தார்கள். கோயில், குளத்தங்கரை வயல், காடு, கடைவீதி எந்த இடமும் பாக்கியில்லாமல் தசரதன் செட்டியாரைப்பற்றியே பேசினர்கள். - - - "தசரதன் செட்டியாரைப்பிடித் துக்கொண்டுபோய் போலி சிலே அடைச்சுப்புட்டாங்க! அவர் வச்சிருந்த வைப்பாட்டியைக் கொன்று புதைச்சுப்புட்டாராம். புதுசா வந்திருக்கும் இன்ஸ் பெக்டரய்யா புலிமாதிரி பாஞ்சு செட்டியாருக்கு விலங்குமாட்டி மதுரை ஜெயிலுக்கு அனுப்புச்சுட்டாராம்.” - 72