பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இது ஆண்பிள்னையின் படமாக இருக்கிறதே!” ஆம். நான் எடுத்ததுதான் அது." -நீதி மன்றத்தில் சிரிப்பொலி கிளம்பியது. நீதிபதியைத் தவிர அனைவரும் சிரித்தார்கள். r “யுவர் ஆனர் கொலை செய்யப்பட்டதாக நடந்து கொண் டிருக்கும் வழக்கோ ஒரு பெண்ணேப் பற்றியது. ஆனால் புகைப் படக்காரர் எடுத்த படமோ ஒர் ஆணின் படமாக இருக்கிறது. சாகாமல் எங்கோ தலைமறைவாக இருக்கும் ஒருத்தியை இறந்த தாகப் பொய் வழக்கு ஜோடித்து என் கட்சிக்காரரைத் துரக்குத் தண்டனைக்கு அனுப்பப் பார்த்திருக்கிரு.ர்கள்'- என்று காந்த ராஜ் அடித்துப் பேசினர். - அடுத்து பிரேதத்தைப் புதைத்த கண்ணுச்சாமி கூண்டிலே ஏற்றப்பட்டான். . . . . . - 'நிதான் பிரேதத்தைப் புதைத்தாயா?” ஆம் நானேதான் புதைத்தேன்.” அந்தப் பிரேதம் ஆணு, பெண்ணு என்று பார்த்தாயா? "அது ஒரு பெரிய பொட்டலமாக இருந்தது. நான் அவிழ்த் துப் பார்க்கவில்லை.” - இதற்கு மேல் காந்தராஜ் எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. r 'யுவர் ஆனர் பிரேதத்தைப் புதைத்த கண்ணுச்சாமியும் பிரேதத்தைப் பார்க்கவில்லை என்று கூறுகிருர் போலீசு அதி காரிகள் தவிர, பிரேதத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண் டவர்கள் போட்டோக்காரரும், கண்ணுச்சாமியும்தான். அவர் களிருவருமே கொலை செய்யப்பட்டுக் கிடந்தது ஒரு பெண் அல்ல என்று சாட்சியம் கூறியிருக்கிருர்கள். ஆகவே இது ஜோடனை வழக்கு என்பது நிரூபணமாகி விட்டது. இறந்ததாக சொல்லப்படும் அருந்ததி எங்கோ இருக்கிருள். அவளைத் தசர தன் செட்டியார் எப்போதோ விவாகரத்துச் செய்துவிட்டார். அந்த உட்பகையைப் பயன்படுத்திச் செட்டியாரின் விரோதிகள் 79.