பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பிரேதத்தின் மூலமாக என்னுடைய கட்சிச்காரருக்குக் கொடிய த ண் டனே வாங்கித் தர முயற்சித்திருக்கிருர்கள். மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள், நிரபராதியான தசரதன் செட்டியாரை விடுதலை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டு கிறேன்:- இதற்குமேல் காந்தராஜ் எதுவும் பேசவில்லை. சட்டங்களை ஆளும் சாட்சியங்களின் இரும்புக் கவசத்தி லிருந்து தப்பிக்க முடியாத நீதி மன்றம் காந்தராஜின் வாதத் திற்கே வெற்றி மாலை சூட்டி விட்டது. - கொலையைத் துப்புக் கண்டுபிடித்த இன்னசிமுத்து முயற்சி தோல்விகண்டது. அருந்ததியினுடைய சடலத்தின் புகைப்படம் ஸ்டேஷனுக்குள்ளே இடம் மாறி உட்கார்ந்து கொண்டது. இந்தத் தகவல்களையெல்லாம் ரத்த வெறிபிடித்த நக்ஸல் பாரிகள் மத்தியில் தியாக உணர்வோடு பணியாற்றிக்கொண் டிருந்த இன்சிைமுத்து பத்திரிகைகளில் படித்து மனதுக்குள் ளேயே அழுதுகொண்டார்.