பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையாள் உறுமிக்கொட்டும், நையாண்டி மேளமும் ஊரையே கிடு கிடுக்கச் செய்தன. வாழைமர வளைவுகளும், மாவிலைத் தோர ணங்களும் ஒரு பெரிய வீட்டுக்காரருக்குச் சிறப்புச் செய்வது, போல ஜாடை காட்டிக் கொண்டிருந்தன. வண்டிகளிலும், கால் நடையாகவும் திமுதிமுவென்று கூட்டம் வந்து குழுமிய வண்ணமிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் த லேயி ல் ஒரு பெட்டி பச்சரிசியும், விடைக்கோழியும் சுமந்து கொண்டு வந் தார்கள். - புதுப்பணக்காரர் சாமித்துரை வீட்டு வாசலில் விரிந்து பரந்த அளவில் பரப்புக்காவணம் போடப்பட்டிருந்தது. சாமித் துரைத் தேவர் சட்டைகூட அணியாமல் பந்தலில் நடந்தபடி பரிபாலனம் செய்து கொண்டிருந்தார். அவர் உடுத்தியிருந்த பட்டு வேட்டியும், கழுத்திலும் கைகளிலும் அணிந்திருந்த கனத்த சங்கிலியும் சந்தனப் பொட்டும், தலையில் அவர் தேய்த் திருந்த எண்ணை ச் சொழப்பும் சாமித்துரைத் தேவரை ஒரு அசல் புதுப்பணக்காரர் என்று தண்டோராப் போட்டுக்கொண் டிருந்தன. முப்பதாண்டுகளுக்கு முன்பு ஊரைவிட்டுத் துரத்தி யடிக்கப்பட்ட சாமித்துரைத் தேவர் சைகோனுக்குச் சென்று எப்படியோ பணக்காரராகிவிட்டார். ஏழையாக இருந்தாலும் பணக்காரகை இருந்தாலும், படித்தவகை இருந்தாலும் முட்டாளாக இருந்தாலும் அவன வன் தகுதிக்கும் அறிவுக்கும் ஏற்ற வகையில் பழிவாங்கும் சுபா வம் இருக்கத்தான் செய்கிறது! அப்படி இல்லாவிட்டால் அன்று தன் னே ஒட்டுத்திண்ணையில் உட்கார அனுமதிக்காதவர்களை யெல்லாம். இன்று ஒரு காசுக்குக் கூட மதிக்காமல் ஊரையே 81.