பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்க்களப்படுத்துவாரா சாமித்துரை: பேரீச்சங்காய்க் கொத் துக்களும், பெரிய பெரிய நொங்குக் குழைகளும் மிஞ்சிப்போய் குன்றுபோல் கு வி ந் து கிடந்தன. ஊர்ப் பிள்ளைகளெல்லாம் அதைப் பங்கு போட்டுக்கொள்ள அடித்துக் கொண்டதைப் பார்த்து சாமித்துரை தன் மனத்தில் உறைந்து கிடந்த அடத் தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருந்தார். 'எந்தச் சாமித்துரையை இந்த ஊர் அகம்பாவிகள் அலட் சியப்படுத்தினர்களோ, அந்தக் கொடுமைக்காரர்களை நான் இன்று ஏளனமாகப் பார்க்கிறேன். ஊருணிக்குள்ளே கிடந்த பிணத்தை நீதான் கொலை செய்தாய்’ என்று எங்கப்பாவின் மீது பழி சுமத்திய ஊரல்லவா இது. பாழாய்ப்போன நீதிபதி சந்தர்ப்ப சாட்சியங்களே வைத் து அதை ருசுப்படுத்தி விட் டாரே! அவர் தூக்கு மேடை ஏறியதும் ஒரு வழிக்கு நல்லது தான்! என் மனத்தில் கொதிப்பும் ஒரு விதமான கொள்கையும் அவருக்கு இந்தக்கதி நேராவிட்டால் எனக்கு ஏற்பட்டிருக்குமா?. ஒரு சில நல்ல காரியங்கள் தீமைகளே உண்டாக்கி விடுவதைப் போல, ஒரு சில தீயவைகளும் நன்மைகளை வழங்கி விடுகின்றன. - சாமித்துரை ஒடியாடிக் காரியம் பார்த்துக்கொண்டிருந் தாலும் அவர் மனம் மட்டும் இப்படித்தான் சுழன்றுகொண்டி ருந்தது. “ஐரா ஏம்மா, ஐரா! உள்ளே இன்னும் என்ன செய்யிறே?" - வேந்திட்டேம்பா! மாரியூரிலேயிருந்து இப்பத்தான் மாமி வந்தாங்க! அவுங்களுக்கு காபி போட்டுக் கொடுத்துட்டு வர் றேன்!” ஐராவதி அருகில் வந்து சொன்னுள். ஐராவதி, பர்மாவில் ஒடும் புகழ் வாய்ந்த ஒரு நதியின் பெயர். சாமித்துரை பர்மாவில் இருந்தபோது பிறந்த பெண் ணுக்கு ஐராவதி என்று பெயர் சூட்டினர் சாமித்துரை. மனிதன் ரத்தத்தில் நல்லவையும் கெட்டவையும் சேர்ந்தே ஊறிக்கிடக் கின்றன. சாமித்துரை என்னதான் மூர்க்களுக இருந்தாலும், பிள்ளைகளுக்கு நதிகளின் பெயர்களே வைக்கும் தமிழ் மரபை 82