பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவில்லை. பர்மியப் பெண்கள் கூட தங்கள் தாய் நாட் அவர் மறக் க்கொண்டதில்லையே! டின் ஒரு ஜீவநதியின் பெயரைச் சூட்டி அம்மா ஐரா, எல்லா நகைகளையும் எடுத்துப் போட்டுக் கொள். உன் தாயார் படத்துக்கு முன்னலே ஒரு தடவைக்கு ಆಣ! தடவை விழுந்து கும்பிடு, அவள் உன்னே எப்படி வளர்த் தாளோ, அதுபோலத்தான் அவள் என்னையும் வளர்த்தாள். அதுவும் என் கொடுமையையும், முன் கோபத்தையும் அடியும் உதையும் தாங்கிக்கொண்டு எனக்குச் சம்ரட்சணை புரிந்தாளே உன் தாயார்! நான்கூட அவளைக் கும்பிட்டால் என்ன என்று தோன்றுகிறது ஐரா!” என்று சாமித்துரை கண்கலங்கினர்.

  • அப்பா!

“என்னை அழவைக்கவும், சிரிக்க வைக்கவும் உன் அம்மாவின் ஆத்மா ஒன்ருல்தான் முடியும் ஐரா! அவளது பணிவிடைகளால் நான் சாந்தியடைந்திருக்கிறேன். அவளது பொறுமையால் வெட்கப்பட்டிருக்கிறேன். அவள் என்னிடம் காட்டியபக்தியால் நான் சிலிர்த்திருக்கிறேன். இன்று அவள் உன் கல்யாணத்தைப் பார்க்காததினால் நான் கண்கலங்கித் தவிக்கிறேன். அம்மா இல் லேயே என்று நீ எவ்வளவு கவலைப்படுகிருயோ, அதைவிட, என் வாழ்க்கையின் பங்காளி இன்று இல்லாமல் போய்விட்டாளே என்று நான் வேதனைப்படுகிறேனம்மா!' -எப்போதும் சினத்தால் சிவந்த கண்களைப் பெற்றிருக் கும் சாமித்துரை அன்று சோகத்தால் சுருண்டுபோய்ப்பேசினர். தந்தையின் கலக்கம் ஐராவதியின் மனத்தையும் கிளறிவிட்டு விட்டது. . ஆறு, அது உற்பத்தியாகுமிடத்திலிருப்பவர்களுக்கு மட்டும் சொந்தமாகி விடுவதில்லை. எங்கெங்கு ஒடுகிறதோ அங்கிருப் பவர்களே எல்லாம் குளிர்வித்து அவரவர்களுக்கு பாத்தியமாகி விடுகிறது. அதுபோலவேதான் பெண்களும், அவர்கள் பிறந்த இடத்திற்கு மட்டும் உரிமையானவர்களாக இருப்பதில்லை. 83