பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமித்துரைத் தேவர் மறுநாள் பகல் வரை உள்ளுர்ப் போலீஸ் நிலையத்திலேயே தான் காவலில் வைக்கப்பட்டிருந்: தார். மகளுக்கு தாலி கட்டியதை அவர் கண்ணுல் பார்க்கா விட் டாலும் மேளச்சத்தத்தை போலீசாரால் கே ட் க விடாமல் தடுத்துவிட முடியுமா? இரவெல்லாம் சாமித்துரை தூங்கவே இல்லை எப்போது விடியுமென்று உட்கார்ந்து கொண்டே இருந்தார். பொழுது விடிந்தது. கல்யாண வீட்டு இரைச்சல் போலீஸ் நிலையம் வரை எட்டியது. - 'கெட்டிமேளம் கெட்டிமேளம்' என்று தாய்மாமன் திரு வுத் தேவர் கூறியது சாமித்துரைக்கு நன்ருகக் கேட்டது. அப் போதுதான் சாமித்துரை பெருமூச்சு விட்டார். சாமித்துரை: களங்கியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கொலைக்குற்றம் அவ்வளவு ஆபத்தானது. இருட்டுக்குள்ளே தூங்கிக் கொண்டி ருக்கும் காட்டுப் பன்றியிடம் விழிப்போடு இருக்கும் வேட்டைக் காரர்கள்கூட சிக்கிக் கொண்டு விடுவதைப்போல, கொலைக்குற் றம் யார் மீது, எந்தப் பக்கத்தலிருந்து பாயும் என்று சொல்ல முடியாது. நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனேக் காப்பாற்றப் போகிறவர்கள் கூட இறந்து விடுவதில்லையா? வீரபாண்டி, அக்கினிச்சாமித் தேவரின் ம க ன். வல்லடி வழக்குகளில் அவன் பெயர் போனவன். அவன் தந்தை அக்கினிச் சாமியும் அப்பேர்ப்பட்டவர்தான். வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு ஜோடிப்பது இவர்கள் தொழில். பல ஆண்டுகளுக்கு முன் அந்தக் கிராமத்து ஊருணியில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்தது. அந்த சடலத்திற்கு ஒரு முன் விரோதத்தைக் கற்பித்து அதில் சாமித்துரைத் தேவரைச் சிக்க வைத்த குடும்பம் அக்கினிச்சாமித் தேவரின் குடும்பம். அதனல், ஒன்றுமறியாத சாமித்துரையின் தந்தை தூக்கு மேடையேறிட நேர்ந்தது. } . . . . , . இப்போது தலை முறை மாறிவிட்டது. அக்கினிச்சாமித் தேவர் இறந்த பின், அவர் மகன் வீரபாண்டி குடும்பத் தலைவ கிை விட்டான். 87.