பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மாமன் திருவுத்தேவர் அ ரு கி ல் வந்து பதட்டத்துடன் ஏதோ சொன்னர். “என்ன மாமா சொல் lங்க! போலீசா! பெரிய வீட்டிலே கல்யாணம்ன்ன அவர்கள் எல்லாம்தான் வருவாங்க! இன்னும் உங்களுக்குப் பழைய பயம் போகலைபோலேருக்கே மாமா' 'இல்லேப்பா! கொலைக் கேசாம்! ஒன்னைக் கைது பண்ண வந்திருக்காங்கலாம்!” திருவுத்தேவர் கோபக்குறியோடு சொன் ஞர். சாமித்துரை கல்யாணப் பந்தலைத் திரும்பிப் பார்த்தார். மணமேடைக்கு அருகில் பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளெல் லாம் நின்று கொண்டிருந்தார்கள். சாமித்துரை மீது கொலே வழக்குப் பதிவாகி விட்டது. அக்கினிச்சாமித் தேவர் மகன் வீரபாண்டியை, சாமித்துரை கொலை செய்து எங்கோ புதைத்து விட்டார் என்பது குற்றச் சாட்டு. கிராமத்திலுள்ள வாயாடிகளுக்கு இது கிடைத்தால் போதாதா? இருக்கும்; சாமித்துரை பழைய விரோதத்தை நெஞ்சிலேயே வச்சிருந்து தீர்த்துக் கட்டிப்புட்டான்' என்று கள்ளுக்கடை, சாராயக் கடைகளிளெல்லாம் பேச்சுக் கச்சேரி வைக்கத் தொடங்கி விட்டார்கள். சாமித்துரை, மறுநாள் காலை வரை அவகாசம் கேட்டார். மகள் கழுத்தில் தாலியேறுவதைப் பார்த்து விட்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு. போலீசார் விட்டு விடுவார் களா என்ன? அவர்கள் உள்ளமே அலாதிதான்! அந்த உள்ளத் திற்கு எந்த டாக்டரும் வைத்தியம் செய்ய முடியாது; எந்த மனுேதத்துவமும் பலிக்கவும் செய்யாது. போலீசாருக்கு நமது உதவியிருந்தால் உங்களைக் கடவுள் அவதாரம் என்று வர்ணிப் பார்கள். அவர்களிடம் நாம் சிக்கிக் கொண்டாலோ தாகத்திற் குக்கூட தண்ணிர் தர்மாட்டார்கள். அதனால்தான் அடிக்கடி குணம் மாறுகிறவனேயும், காரணமில்லாமல் எரிந்து விழுகிற, வனையும் போலீஸ் புத்திக்காரன் என்று பெரியவர்கள் சாடு இருங்கள் போலும் 86,