பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கூறிய சாமித்துரை படியானே அழைத்துக்கொண்டே கொல்லைப் பக்கமாகப் போளுர். சாமித்துரை, ஐராவதி திருமணத்திற்கு நாள் வைத்துவிட் டார். மாப்பிள்ளை ஒரு ஏழை விவசாயியின் மகன். தனக்கு ஆண் வாரீசு இல்லாததால், தன் மகளுக்கே சொத்துக்களனைத்தை யும் கொடுத்துவிடத் தீர்மானித்தார் சாமித்துரை. திருமணத்திற்கு நாள் வைத்ததிலிருந்து ஊரில் வீரபாண் டியின் நடமாட்டமே இல்லை. கொழும்பிற்குப் போய் விட்ட தாகக் கள்ளுக்கடையில் பேசிக் கொள்ளப் பட்டது. அந்த க் கிராமத்தில் எந்தத் தகவலும், முதலில் கள்ளுக் கடையில்தான் வெடிக்கும். அதற்குப் பிறகுதான் ஊருக்குள்ளே பரவும். ஆனால், வீரபாண்டியைப் ப ற் றிய செய்திக்கு, கள்ளுக் கடையிலேயே மறுப்புக் கிளம்பியது. - - - - "வீரபாண்டியாவது, இலங்கைக்குப் போவதாவது; அங்கே அவனுக்கு யார் இருக்கிருர்கள்? வீரபாண்டி தலை மறைவாக இருப்பதற்கு ஏதோ ரகசியமான காரணம் இருக்கத்தான் செய் யும் வீட்டிலே போய்க் கேட்டால் எங்களுக்குத் தெரியாது என் கிருர்கள். பஞ்சாயத்துக் கொட்டகையிலே கேட்டால் அவனுக் கென்ன புதுமோகம் பிடித்து அலைகிருன் காதலியோடு ஏர்வாடி சந்தனக் கூடுக்குப் போயிருப்பான். என்று கேலி பேசுகிருர்கள்' என்று கள்ளுக்கடையில் பேச்சுக்கள் அடிப்பட்டன. எப்படியோ கள்ளுக்கடைப் பேச்சு கச்சேரிக் கொட்டகை வரை போய்விட் டது. சீக் குப் பிடித்து மடிந்த சடலத்திற்கே ஸ்தலபுராணம் எழுதக் கூச்சப்படாத போலீஸ் இலாகா காணுமற் போன ஒரு இளைஞனைப்பற்றி ஊரில் அடிபடுகிற வதந்திகளை காது கொடுத் துக் கேட்காமல் இருக்குமா? அவ்வளவுதான்! தென்னந்தோப்பு, கண்மாய்க் கரை, களத்துமேடு எங்கு பார்த்தாலும் போலீஸ் மோப்பம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. வீரபாண்டியன் வீட் டுக்கு தினசரி போலீசார் போய் வந்தபடி இருந்தார்கள். விசர் ரணையும் வலைவீச்சும் ஒய்ந்தபாடில்லை! * 89