பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐராவதியின்கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு படியான், ஆடுகள் வாங்குவதற்காக தூத்துக் குடிக்குப் போயி ருந்தான். அவன் ஊர் திரும்பும்போது இருட்டி விட்டது. வைப் பாற்றுப் படுகையில் ஆடுகளே அமர்த்திவிட்டு அங்கேயே அவன் துரங்கி விட்டான். - - - . . . ', பாதி ஜாமத்தில் ஆடுகள் மிரண்டு பதறின. படியான் அந்த அதிர்ச்சியில் கண்விழித்துப்பார்த்தான். யாரோ இரண்டு பேர் ஆடுகளின் பக்கமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. யார் நீங்கள் நான் பொல்லாதவன்; மரியாதையாக ஒடி விடுங்கள்!” என்று படியான் குரல் கொடுத்தான். -. பதில்பேச்சு எதுவும் இல்லை. உருவங்கள் மட்டும் அருகில் நெருங்கிக் கொண்டிருந்தன. படியான் அரிவாளைச் சரி செய்ಣ கொண்டான். "என் கையில் இருப்பது மக்கு அரிவாள் என்று நினைப்பா? இது பலரைப் பதம் பார்த்தது. இன்னும் வீரபாண்டியின் ரத் தம் கூடக் காயவில்லை. ஜாக்கிரதை' - படியானின் இந்தக் கர்ஜனையைக் கேட்டதும் அந்த உருவங் t கள் ஒதுங்கி விட்டன. - . . . . . . . . . . . - படியான் அதற்குமேல் தூங்கவில்லை. அப்போதே ஆடுகளை ஒட்டிக்கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான். அவன் கிராமத் திற்குள் நுழையும்போது கிழக்கு வெளுத்து விட்டது. மதுரையிலிருந்த டி.எஸ். பிக்கு தகவல் வந்தது, வீரபாண்டி காணுமல் போயிருப்பது உண்மை அல்ல; அவன் கொலை தான் செய்யப்பட்டிருக்கிருன். அதற்குப் போதிய துப்புக் கிடைத் திருக்கிறது-என்று டி.எஸ். பிக்கு ரகசியக்கடிதம் வந்திருந்தது. அதைப் படித்ததும் டி. எஸ்.பி. மகிழ்ச்சியோடு அந்தக் கிராமத் திற்குக் கிளம்பினர். அவர் நுழையும் போதே அந்தக் கிராமம் பரபரப்படைந்திருந்தது. ஆண், பெண் எல்லோரும் ரகசிய மாகக் கி சு கிசுத் துக் கொண்டிருந்தார்கள். கலவரமடைந்த